Subscribe

RSS Feed (xml)

Powered By

Skin Design:
Free Blogger Skins

Powered by Blogger


முத்தரையர் சமுகத்தின் முகமாக உலகம் முழுவதும் வாழும் முத்தரையர்களின் இணைப்பு பாலமாகவும், சமுக இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து சமுக செய்திகளை சொந்த விருப்பு வெறுப்பின்றி தரும் ஒரு தளமாக "இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்" தொடர்ந்து தனது சமூகப்பணியினை செய்ய உறவினர்கள் தங்களது பங்களிப்பினை தர அன்புடன் வேண்டுகிறோம் எங்களுடைய முகவரி

இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்

சிவன் கோவில் தெரு, பழஞ்சூர்-அஞ்சல், பட்டுக்கோட்டை - வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்,

தமிழ்நாடு - 614 701

தொலைப்பேசி: 0091-4373-255228

மின் அஞ்சல்: sanjai28582@gmail.com

வலைத்தளம்: http://illamsingam.blogspot.ae/

ஸ்கைப் : sanjaibcom டுவிட்டர் : @sanjai28582

Illam Singam (young lion) Organization (Only mutharaiyar community Young's) joins with us we are located India, Tamilnadu State, Thanjavur District, Pattukkottai.

Founder and Organizer of the Organization :K.SANJAIGANDHI M.B.A.,


we are created our new blog and new embalm for our organization we want to develop our community for non loss of our culture and life style but that same time we want to give Education, Business Opportunity, and Develop the knowledge of Politics

In the State of Tamil Nadu

Still we did not get any gain or benefit from the state that same time we are in the state 1/4 , why? What is the reason behind? Not one known the answer

we are known:
We have No Unity

we are Not Educationist
we are not Known our History

Yes if you have any solution share with us...............

We have Solution Accept it.................................

WE ARE WAITING FOR YOUR VALUABLE RESPONSE AND OPINION....

MUTHARAIYAR

MUTHARAIYAR
We Are Follow up................

YOUNG LION ORGANIZATION

YOUNG LION ORGANIZATION

தலைமை ஒருங்கிணைப்பாளர்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
K.சஞ்சய்காந்தி அம்பலக்காரர் M.B.A., ஒருங்கிணைப்பாளர், இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம் Contact : 0091-9159168228 E-Mail : sanjai28582@gmail.com

வெள்ளி, 28 ஜூன், 2013

29 வழங்கு பெயர்களில் வாழ்ந்து வரும் முத்தரையர் அனைவரையும் "முத்தரையர்" என ஒரே பெயரில் அறிவித்து வெளியிட்ட அரசாணையின் நகல் வடிவம்.

29 வழங்கு பெயர்களில் வாழ்ந்து வரும் முத்தரையர் அனைவரையும் "முத்தரையர்" என ஒரே பெயரில் அறிவித்து வெளியிட்ட அரசாணையின் நகல் வடிவம்.


GOVERNMENT OF TAMIL NADU ABSTRACT


WELFARE OF BACKWARD CLASSES – MUTHARAIYAR COMMUNITY AND ITS SUB-SECTS CALLING THE MAIN COMMUNITY AND IT’S AS MUTHARAIYAR – ORDERS – ISSUED

Backward Classes and Most Backward Classes welfare department G.O. MS . No: 15 Dated: 22.02.1996
Order: People belonging to mutharaiyar and its sub – sects have been demanding that they should be called in one name i.e. MUTHARAIYAR: Accepting their demand, the Honorable chief Minister made an announcement on 07.02.1996 that mutharaiyar Community and it’s sub – sects hitherto known in various names, will hereafter be called as mutharaiyar and that all the privileges and concessions now enjoyed by them will be continued.

2. Accordingly the Government direct that Mutharaiyar Community and the following sub-sects of that community, hitherto known in various names shall hereafter be called in one name i.e. “MUTHARAIYAR”

1.   MUTHURAJA
2.   MUTTIRIYAR
3.   AMBALAARAN
4.   SERVAI
5.   SERVAIKKARAN
6.   VALAIYAR
7.   KANNAPPA KULA VALAIYAR
8.   BARTAVA VALAIYAR (PARTAVA VALAIYAR)
9.   PALAYAKKARAN
10.               KAVALGAR
11.               THALAIYARI
12.               VAZHUVADIYAR
13.               POOSARI
14.               MUTHIRAJ
15.               MUTHIRIYA MOOPAR ( SHANAN)
16.               MUTHIRIYA MOOPANAR (PARKAVAKULAM)
17.               MUTHIRIYA NAIDU (GAVARA)
18.               MUTHIRIYA NAICKER
19.               PALAYAKKARA NAIDU
20.               PALAYAKKARA NAICKER
21.               MUTHURAJA NAIDU
22.               VANNIYARKULA MUTHURAJ
23.               MUTHIRIYA URALI GOUNDER
24.               MUTTIRIYA RAO
25.               VETTUVA VALAIYAR
26.               KURUVIKARA VALAIYAR
27.               ARAYAR
28.               AMBALAM
29.               PILLAI

However the Privileges and concessions now enjoyed by them will be continued.

(By Order of the Governor)

N. HARI BHASKAR
CHIEF SECRETARY TO GOVERNMENT 

தகவல் உதவி : காற்று மாத இதழ்

ஞாயிறு, 23 ஜூன், 2013

அணியாப்பூர் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவில் உயிரோடு இருப்பவருக்கு இறுதிச்சடங்கு நடத்தி பாடையில் சுமந்து வந்து கோவில் முன்பு ஈஸ்வரன் உயிர் தரும் வினோத நிகழ்ச்சி நாளை நடக்கிறது.

வையம்பட்டி
அணியாப்பூர் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவில் உயிரோடு இருப்பவருக்கு இறுதிச்சடங்கு நடத்தி பாடையில் சுமந்து வந்து கோவில் முன்பு ஈஸ்வரன் உயிர் தரும் வினோத நிகழ்ச்சி நாளை நடக்கிறது.

திருவிழா தொடங்கியது 

மணப்பாறையை அடுத்த அணியாப்பூர் கோட்டை மாரியம்மன் கோவிலில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை திருவிழா நடைபெறுவது வழக்கம். 15 நாள் நடக்கும் இந்த திருவிழா நேற்று இரவு தொடங்கியது. கோவிலில் கிராம மக்கள் சிறப்பு வழிபாடு நடத்திய பின் வீரப்பூர் ஜமீன்தாரும், கன்னிமாரம்மன் கோவில் பரம்பரை அறங்காவலருமான கிருஷ்ணவிஜயனை கோவிலுக்கு அழைத்து வந்தனர். அதன் பின் கோவிலில் இருந்து சண்முகம் முத்தரையர் மற்றும் கிராமமக்கள் சாமி நகை பெட்டியுடன் பாப்புக்காளை நாடாரை அழைத்துக்கொண்டு கோவிலுக்கு வந்தனர்.

நள்ளிரவு அணியாப்பூர் குளக்கரை அருகில் இருந்து அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் மாரியம்மனும், கரகமும் கோவிலுக்கு அழைத்து வரப்பட்டு சிறப்பு வழிபாடு விடிய, விடிய நடைபெற்றது. இன்று (திங்கட்கிழமை) காலை கோட்டை மாரியம்மன் கோவில் முன்பு வீரப்பூர் ஜமீன்தார் கிருஷ்ணவிஜயன் சார்பில் முதல் ஆடு வெட்டிய பின்பு தொடர்ந்து ஆடு, கோழி வெட்டுதல், பால்குடம், அக்னிசட்டி எடுத்தல், அலகு குத்துதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மாலை வரை நடக்கிறது.

வினோத நிகழ்ச்சி 

நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை முளைப்பாரி கொண்டு வருகின்றனர். அதை தொடர்ந்து அணியாப்பூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான வாகனங்களில் பக்தர்கள் பல்வேறு வேடம் அணிந்து வண்டிவேடம் வருவார்கள். இதன் பின்னர் அணியாப்பூர் தங்கவேல் முத்துராஜா இறந்து விட்டதாகவும் மாலையில் இறுதிச்சடங்கு நடைபெறும் என்றும் காரில் ஒலிபெருக்கி வைத்து கிராமங்களில் அறிவித்துவிட்டு அவருக்கு இறுதிச்சடங்கு செய்து உடலை பாடையில் வைத்து சுமந்து வருகின்றனர்.

கோவில் எதிரில் சற்று தூரத்தில் வெட்டி வைக்கப்பட்டுள்ள குழிக்கு அருகில் உடலை வைத்ததும் கோவிலில் இருந்து ஈஸ்வரன் வந்து தங்கவேல் உடல் மீதும் தீர்த்தம் போட்டதும் தங்கவேல் உயிருடன் எழுந்து விடும் வினோத நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் வெட்டி வைத்த குழியில் கோழியை வெட்டிப்போட்டு மூடி விட்டு தங்கவேலை கோவிலுக்கு அழைத்து வந்து சிறப்பு வழிபாடு நடத்த உள்ளனர்.

படுகளம் 

இரவில் கோவில் முன்பு உள்ள கமுகு மரத்தில் பக்தர் ஏறி நின்றதும் கோவில் முன்பு பொரி–கடலை, முறுக்கு, ரொட்டி உள்ளிட்ட படையல் வைப்பார்கள். அதன் அருகே ஒருவர் முக்காடு போட்டு கையில் விளக்குடன் அமர்ந்திருக்க, கோவில் முன்பு 4 வாலிபர்களை படுக்க வைத்து இறந்தவர்கள் போன்று துணியால் உடலை இறுதிச்சடங்கு செய்யப்பட்டு கோவிலை 3 முறை சுற்றிவந்து ஆடுவெட்டி வாலிபர்கள் நெற்றியில் ரத்தப்பொட்டு வைத்து உயிர்பெற வைக்கும் படுகளம் என்ற வினோத நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

News Source : DINATHANTHI

வெள்ளி, 21 ஜூன், 2013

செவ்வாய், 18 ஜூன், 2013

MAKKAL MARUMALARCHI MANTRAM





Perarasau Perumbidugu Mutharaiyar 1338th birthday celeberations of Makkal Marumalarchi Mandram on 9th June 2013. The General Secretary of the Mandran welcomes the Gathering , other dignitories are in the dias. A paattarangam entitled Seer ketta samuthayathai seer paduthuvom vaareer , a valakkadu mandram entitld Vaaipugal irundhum, vasathigal irundhum munnerathavariya muthariayargal kutravaaligale were organised. 11 prominant people in different fields were falicitated and awarded, Perumaikuria Virundhinar award and Mutharaiyar Semmal Virudh. The Paattarangam, was capsulated as a book and was relesed on the same day.

நாலடியார்

நாலடியார் 
  திருக்குறளுக்கு அடுத்த நிலையில்வைத்துப் போற்றப்பெறும் சிறப்பு வாய்ந்த அறநூல் 
நாலடியார். நூல் அமைப்பில் இரண்டிற்கும் மிகுந்த ஒற்றுமை உண்டு. திருக்குறள் சூத்திரம் 
போன்று இரண்டு அடிகளில் கருதிய பொருளைச் சுருங்கச் சொல்லிவிளங்க வைக்கிறது; 
நாலடியாரோ, பொருள்களைத் தக்கஉதாரணம் காட்டி விளக்குவதோடு, கற்போர் உளம் கொளும்வகையில் 
தெளிவுபடவும் உரைக்கின்றது. இவ்வகையில் நாலடியாரைத் திருக்குறளின் விளக்கம் என்று 
கூறலாம்.'நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி' என வழங்கும் பழமொழியிலும், 'பழகு 
தமிழ்ச்சொல் அருமை நால்இரண்டில்' என உரைக்கும் தனிப்பாடல் பகுதியிலும் இந்த இரு அற 
நூல்களையும் ஒருசேர வைத்து எண்ணுதல் நோக்கத் தக்கது. 

 
நான்கு அடி வெண்பாக்களால் இந்நூல் செய்யுட்கள் அமைந்திருத்தலின் இதனை 'நாலடி'என்றும், 
'
ஆர்'என்னும் சிறப்பு விகுதியை இறுதியில் இணைத்து, 'நாலடியார்' என்றும் வழங்கி 
வருகின்றனர்.குறளைத் 'திருக்குறள்' என்று குறித்ததைப் போல,நாலடி வெண்பாக்களாலாகிய 
வேறு நூல்கள் பல தமிழில் இருக்கவும், இந் நூல் ஒன்றையே 'நாலடி' என்ற பெயரால்குறித்து 
வந்துள்ளனர். இந் நூலில் அமைந்துள்ள பாடல்தொகையை உட்கொண்டு, 'நாலடி நானூறு' என்றும் 
இதுகுறிக்கப் பெறுகின்றது. இதற்கு 'வேளாண் வேதம்' என்றஒரு பெயரும் உளதென்பது சில 
தனிப் பாடல்களால் தெரியவருகிறது. 

 
இந் நூல், ஆசிரியர் ஒருவரால் இயற்றப்பெற்றது அன்று என்றும், பலர் பாடிய பாடல்களின் 
தொகுப்பாய் உள்ளது என்றும் சிலர் கூறுகின்றனர். இது பற்றிய கன்னபரம்பரைவரலாறு ஒன்றும் 
உள்ளது: ஒரு சமயம் எண்ணாயிரவர்சமண முனிவர், பஞ்சத்தால் தம் நாடு விட்டு வந்து, பாண்டியன் 
ஆதரவில் வாழ்ந்து வந்தனராம். சில காலத்தில்தம் நாடு முன் போலச் செழிப்புறவே அவர்கள் 
மீண்டுசெல்ல விரும்பிய போது, பாண்டியன் அவர்களைப்பிரிய மனம் இன்றி, விடைகொடாது 
இருந்தனனாம். இதனால், எண்ணாயிரவரும் ஒவ்வொரு பாடல் எழுதித்தத்தம் இருக்கையின் கீழ் 
வைத்துவிட்டு, பாண்டியனிடம் அறிவியாமலே, தம் நாட்டுக்குத் திரும்பிவிட்டனராம். இச் 
செய்தி தெரிந்த மன்னன், புலவர்களைப் பிரிந்த மனத்துயராலும், தன் வாக்கை அவர்கள் 
மதியாமைபற்றி எழுந்த வெகுளியாலும், அவர்கள் எழுதிய எண்ணாயிரம் பாடல்களையும் வைகைப் 
பெருக்கில் எறியக் கட்டளைபிறப்பித்தானாம். அரசன் ஆணைப்படி வைகையில் எறிந்தஏடுகளில் 
நானூறு நீரை எதிர்த்து வரவே, பாண்டிய மன்னன் அவற்றைச் சிறந்தன என்று கொண்டு 
தொகுப்பித்துவைத்தானாம். இந் நிகழ்ச்சியைச் சில தனிப் பாடல்கள் தெரிவிக்கின்றன. 

 
எண் பெரும் குன்றத்து எணாஅயிரம்இருடி 
 
பண் பொருந்தப் பாடிய பா நானூறும் 

 
என்றும் ஒரு தனிப்பாடலில் காண்கிறது. 

 
இவ் வரலாறு எவ்வாறாயினும், நாலடியார்புலவர் பலர் பாடிய செய்யுட்களின் தொகுதி என்றே 
ஆராய்ச்சியாளர் எண்ணுகின்றனர். கூறியது கூறலாகச்சில கருத்துகள் அங்கங்கே காணப்பெறுதலும் 
இதற்குத்தக்க சான்றுகளாம் என்பர். 

  '
வெள்ளாண் மரபுக்கு வேதம்' எனச்சான்றோர் 
 
எல்லாரும் கூடி எடுத்துரைத்த, சொல்ஆரும், 
 
நாலடி நானூறும் நன்கு இனிதா என்மனத்தே 
 
சீலமுடன் நிற்க, தெளிந்து. 

 
என்ற தனிப்பாடல் இந்நூலிலுள்ள பாக்கள் சான்றோர் பலர் பாடியவை என்னும் கருத்தைப் 
புலப்படுத்துகிறது. சீவக சிந்தாமணி உரையில் (1089).நச்சினார்க்கினியர், நாலடியார் 
பாடல் ஒன்றை மேற்கோள்காட்டி, 'பிறரும் இச்சமயத்தார்,"சிறுகா பெறுகாமுறை பிறழ்ந்து 
வாரா" (நாலடி 110) என்பதனானும் உணர்க' என்று குறித்துள்ளனர். இவற்றால் நாலடியார்சைன 
சமயச் சான்றோர் பலர் பாடிய பாடல்களின் தொகுதிஎன்பது போதரும். 

 
நாலடியார்ப் பிரதிகள் சிலவற்றில் காணும் 'வளம் கெழு திருவொடு' எனத் தொடங்கும் 
பாடலிலிருந்து, நாலடிநூலுக்கு அதிகாரம் வகுத்தவர் 'பதுமனார்' என்பதும், 
இவ்வதிகாரங்களை முப்பாலுக்கும் அடைவுபடுத்தி உரை கண்டவர் 'தருமர்' என்பதும் 
தெரியவருகின்றன. பதுமனார், திருக்குறள் நூலைப் போன்று அதிகாரத்திற்குப் 
பப்பத்துப்பாடல்களாக அமைத்து, நூலை உருவாக்கியிருக்கிறார். நூலுக்குப் புறம்பாக முதற்கண் 
உள்ளகடவுள் வாழ்த்துப் பாடல் நீங்கலாக, இதன்கண் 40 அதிகாரங்களும் 400 பாடல்களும்உள்ளன. 
பின்னர், பாலும் இயலும் வகுத்த உரையாசிரியர்கள், அறத்துப்பால், பொருட் பால், காமத்துப் 
பால் என முப்பாலாகப்பகுத்து, இயல் பாகுபாடுகளும் செய்திருக்கின்றனர். பொருட்பாலில் பொது 
இயல், பல் நெறி இயல் என்பனஓர் அதிகாரமே ஓர் இயலாகக் குறிக்கப்படுபவை. தருமர்இறுதி 
மூன்று அதிகாரங்களையும் காமத்துப்பால் எனக் கொண்டு, 'பொதுமகளிர்' என்னும் ஓர் அதிகாரத்தை 
(38) '
இன்ப துன்பஇயல்' என்றும், ஏனை இரண்டு அதிகாரங்களையும்(39, 40) 'இன்ப இயல்' 
என்றும் கொள்வர்.வேறு சில உரைகாரர் இறுதி அதிகாரமாகிய 'காமம் நுதல் இயல்' ஒன்றை 
மட்டுமேகாமத்துப் பாலுக்கு உரியதாகக் கொண்டுள்ளனர். ஓர் அதிகாரமே இயல்களாக 
அமைந்துள்ளமையும், ஓர் அதிகாரம் இயலாகவும் 'பால்' எனப்படும் பெரும் பிரிவாகவும் 
அமைந்துள்ளமையும் சிந்திக்கின், இந்தப் பால், இயல் பகுப்பு சிறந்த அமைப்பு முறையாகத் 
தோன்றவில்லை. காமத்துப் பாலின் இன்ப இயல் பாடல்களுக்குத் துறைக்குறிப்புகளும் உரைகளில் 
காணப்படுகின்றன. 

 
இந்நூல் பாடல்களில் ஆடூஉ முன்னிலை(52) அதிகமாகவும், மகடூஉ முன்னிலை (6) மிகக் 
குறைவாகவும் வந்துள்ளன. 'பூங்குன்றநாட!' என வரும் விளித்தொடர் நூலகத்து இரண்டு 
இடங்களில் (128, 212)வருவது கொண்டு, பூங்குன்ற நாட்டுத் தலைவனைக் குறித்ததாக 
எண்ணுவோரும் உண்டு. ஆனால், இவையும் ஏனைய ஆடூஉ முன்னிலைத் தொடர்களைப் போலப்பொது வகையில் 
அமைந்தவை என்பதே பொருத்தம் எனத் தோன்றுகிறது. 

 
ஆனால், 'முத்தரையர்' என்ற அரசபரம்பரையினரைக் குறித்த செய்திகள் இரண்டு பாடல்களில் 
(200, 296)
உள்ளன. இம் முத்தரையர் வரலாற்றொடு இயைபுபட்டவர் என்றும், இவர்கள்காலம் கி.பி. 
7-
ஆம் நூற்றாண்டுக்குப் பிந்தியதாதல் வேண்டும் என்றும் ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். எனவே, 
நாலடி நானூறும் இக்காலத்தைச் சார்ந்ததாதல் கூடும். 

 
இந் நூலைத் தொகுத்து முறைப்படுத்தியபதுமனாரே இதற்கு ஓர் உரையும் வகுத்தார் என்பது 
தெரியவருகிறது. மதிவரர் என்பவர் இந் நூற்கு அரும் பதவுரை இயற்றினார் என்பதும், தருமர் 
என்பவர் உரை எழுதினார் என்பதும் தனிப்பாடல்களால் தெரியவருகின்றன. இந்நூலினை இளம்பூரணர் 
முதலிய தொல்காப்பிய உரைகாரரும் பரிமேலழகரும் அடியார்க்கு நல்லாரும் தம்தம்உரைகளில் 
மேற்கோளாக எடுத்தாண்டுள்ளனர். 

Thanks to : 
இவன் 
கெ. குமார் 
உதவிப் பேராசிரியர் 
தமிழ்த் துறை 
மாநிலக் கல்லூரி 
சென்னை-5. 
அலைபேசி எண் – 9444218357.