சிவன் கோவில் தெரு, பழஞ்சூர், பட்டுக்கோட்டை வட்டம், தஞ்சாவூர், தமிழ்நாடு - 614701
கைபேசி எண்கள்: 0091- 9791486581, 0091- 9003834321, 0091-9629328985
E-mail: sanjai28582@gmail.com
மே மாதம் 23 ம் தேதி (2010 ம் வருடம்) பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1335 ம் ஆண்டு பிறந்த தின விழாவும், இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவும் பழஞ்சூர் சிவன்கோவில் அருகில் மிக சிறப்பாக நடந்தது, இந்த விழாவிற்கு வந்திருந்த இயக்க உறுபினர்களையும்,சமுதாய நண்பர்களையும், பெரியோர்களையும் வரவேற்று இயக்கத்தின் தலைவர் திரு.தேவா (எ) சுரேஷ் பேசினார். மேலும் சிறப்பு விருந்தினராக திரு. கருப்பையன்அவர்களும், மேலும் இயக்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட பொறுப்பாளர் திரு.விவேக், திருவாரூர் மாவட்ட பொறுப்பாளர் திரு.ராஜகுரு ஆகியோரும் சிறப்புரையாற்றினர்,
இயக்கத்தின் வளர்ச்சி குறித்தும் இயக்கத்தின் செயல் திட்டம் குறித்தும் இயக்கத்தின் செயலாளர் திரு.காந்தி அவர்கள் விளக்க உரை நிகழ்த்தினார், மேலும் விழாவில் கலந்து கொள்ள வருகை தந்த இயக்கத்தின் பிரதிநிதிகளுக்கும், உறவினர்களுக்கும் விழாவின் நிறைவில் தேனீரும், இனிப்பும் கொடுத்து உபசரிக்கப்பட்டது, இவ்விழாவினை சிறப்பாக நடத்திட இயக்கத்தின் முன்னோடிகள் திரு.ராஜேந்திரன், திரு.நீலகண்டன், திரு.மணிகண்டன், திரு.கார்த்திக், திரு, வீரமணி ஆகியோர் முழு ஒத்துழைப்பையும் வழங்கினர் ,
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
1. தமிழகம் முழுவதும் 29 பட்ட பெயர்களுடன் வாழ்ந்து வரும் முத்தரையர் சமூகத்தினரை ஒரே பெயராக "முத்தரையர்" என்று 2004 ம் ஆண்டில் அன்றைய முதல்வரால் அறிவிக்கப்பட்டதினை தமிழக அரசு உடனடியாக செயல் படுத்தி அரசாணை வெளியிட வேண்டும். இதனை மத்திய அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு முன்பாக அறிவிக்கவேண்டும்
2. முத்தரையர் சமுகத்தின் அனைத்து பிரிவினரையும் இணைத்து அறிவிப்பதுடன் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கவும், தமிழக அளவில் 20% தனி இட ஒதுக்கிடு வழங்கவும் வலியுறுத்துகிறோம்.
3. தமிழக அமைச்சரவையில் மேலும் ஒரு பிரதிநிதித்துவம் தர திமுக அரசை வலியுறுத்துகிறோம்
4. வறுமைக்கோட்டுக்கு கிழே வாழும் முத்தரையர் சமூகத்தினருக்கு தற்போதிய சூழ்நிலையில் ஒருவேளை உணவிற்கே கஷ்டபடும் நிலையில் எம்மின பெண்களுக்கு திருமணம் என்பது கனவாகவே உள்ளது, நிறைய பெண்கள் திருமண வயதினை கடந்தும் நிற்கிறார்கள் எனவே தமிழக அரசு உடனடியாக முத்தரையர் இன பெண்களுக்கு திருமண உதவி தொகையாக ரூபாய் 5௦,000 வழங்க வேண்டும்
5. நமது நீண்ட நாள் கோரிக்கையான சாதிவாரி கணக்கெடுப்பிற்கு இசைவான நிலை தெரிவித்த இந்திய மத்திய அரசிற்கு நன்றியினை உரித்தாக்குகிறோம்
6. தமிழக அரசு முத்தரையர் பிறந்த நாளில் விழா எடுபதற்கு எங்களின் நன்றியினை உரிதக்கும் அதே நேரம் முத்தரையர் பற்றிய வரலாற்றினை பாட புத்தகங்களில் சேற்பதுடன் முத்தரையர் பிறந்த நாளில் அரசு விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும்
7. முத்தரையர்களால் உருவாக்கப்பட்ட தஞ்சாவூரில் தமிழக அரசு தனது செலவில் சிலை வைக்க வேண்டும் என்று அன்புடன் வேண்டுகிறோம்
8. சமுதாயத்தினை சேர்ந்த அரசியல் இயக்க பிரமுகர்கள், முன்னாள், இந்நாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் இந்நாள் அமைச்சர் பெருமக்கள், முத்தரையர் சமுதாய இயக்கங்களின் தலைவர்கள், முத்தரையர் முன்னேற்ற சங்க தலைவர்களை ஒருங்கிணைக்கும் ஒரு முயற்சியை எடுப்பது என்றும்
9. தமிழக அரசு அமைக்கவிருக்கின்ற சட்டமன்ற மேலவையில் முத்தரையர் சமூகத்தினருக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கிட தமிழக முதல்வரிடம் வலியுறுத்துவது எனவும்
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன முடிவில் திரு. நீலகண்டன் நன்றி கூற விழ இனிதே நிறைவடைந்தது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக