வியாழன், 8 ஜூலை, 2010

திருச்சியில் தமிழ்நாடு முத்தரையர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம்

திருச்சி: திருச்சியில் தமிழ்நாடு முத்தரையர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் வக்கீல் சிவராஜ் தலைமையில் நடந்தது.மாவட்ட செயலாளர் தங்கவேல் வரவேற்றார். மாவட்ட தலைவர் பாஸ்கரன் தீர்மானங்களை விளக்கிப் பேசினார்.
முத்தரையர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, அரசியலில் 20 சதவீதம் தனி இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும். இக்கோரிக்கை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்துவது. கோவை உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் முத்தரையர்கள் திரளாக பங்கேற்பது. ஐ.ஏ.எஸ்., தேர்வில் முதல்முறையாக வெற்றிபெற்ற முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த லலிதாவுக்கு பாராட்டுத் தெரிவிப்பது. பாதிக்கப்படும் முத்தரையர் சமூக மக்களுக்காக, "மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்' என்ற அறக்கட்டளை மூலம் நிவாரணம் தேடுவது உள்ளிட்ட தீர்மானங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக