வியாழன், 8 ஜூலை, 2010

காஞ்சாம்புறத்தில் இந்து அரையர் சமுதாய பேரவை மாநில மாநாடு
Posted on February 3, 2009 by enagercoil.com

நித்திரவிளை: தமிழ்நாடு இந்து அரையர் சமுதாய பேரவையின் மூன்றாவது மாநில மாநாடு காஞ்சாம்புறம் கைரளி திருமண மண்டபத்தில் நடந்தது. மாநாடை முன்னிட்டு காலை பிரதிநிதிகள் மாநாடு நடந்தது. இதற்கு பேரவை தலைவர் கந்தப்பன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் மனோகரன், துணைத்தலைவர் நடேசன் முன்னிலை வகித்தனர். இளைஞரணி பொதுச்செயலாளர் சிவகுமார், முருகன், முருகப்பன், அசோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மாலை நடந்த மாநாட்டிற்கு பேரவை தலைவர் கந்தப்பன் தலைமை வகித்தார். கேசவன், சுந்தரேசன், கோபாலன், பேரவை பொருளாளர் சுகுமாரன், இளைஞரணி தலைவர் முருகன், பொதுச்செயலாளர் சிவகுமார், மகாதேவன், பேரவை துணைத்தலைவர் முருகப்பன், முருகன், அசோகன் முன்னிலை வகித்தனர். துணைத்தலைவர் நடேசன் வரவேற்றார். பத்திரப்பதிவு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் சுரேஷ்ராஜன் அரசு ஆணையை வெளியிட்டார்.

மத்திய முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பெல்லார்மின் எம்.பி., தமிழ்நாடு முத்தரையர் சங்க தலைவர் ராஜமாணிக்கம், பூபதிமுதிராஜ், கேரளா மாநில தீவிரசபா தலைவர் ராதாகிருஷ்ணன், கேரள மாநிலத்தை சேர்ந்த பிரதாபன், எம்.எல்.ஏ., க்கள் ஜாண்ஜேக்கப், ஜாண்ஜோசப், ஜெயபால், முன்னாள் எம்.எல்.ஏ., க்கள் சுந்தரதாஸ், பச்சைமால், மாவட்ட பஞ்., தலைவர் அஜிதா மனோதங்கராஜ், தமிழ்நாடு முத்தரையர் சங்க துணைத்தலைவர் மங்களாசெல்லத்துரை, குளச்சல் நகராட்சி சேர்மன் ஜேசையா, சங்க இளைஞரணி தலைவர் பாஸ்கரன், பொதுச்செயலாளர்கள் சின்னையா, முருகேசன், கொள்கை பரப்பு செயலாளர் முரசுவிரையா, சமூக செயலாளர் முத்தையன், அமைப்பு செயலாளர் காஞ்சி காடக முத்தரையர், தூத்துக்குடி பார்வலை மீன்பிடி தொழிலாளர்கள் நல சங்க தலைவர் தில்லைமுத்து, மீனவர் மேம்பாட்டு சங்க தலைவர் செல்வராஜ்குமார், மலைவாழ் காணி மறுமலர்ச்சி சங்க பொதுச்செயலாளர் ராஜன்காணி, கடலோர மக்கள் சங்க தலைவர் சேவியர், தமிழ்நாடு பருவதராஜகுல மீனவர் சங்க பிரதிநிதி ஜெயராமன், பூத்துறை தீவிர சபா கரயோக தலைவர் ஸ்ரீகுமார், தமிழ்நாடு தியாகிகள் கழக தலைவர் சந்திரன் உட்பட பலர் பேசினர்.

பொதுச்செயலார் மனோகரன் தீர்மானங்களை வாசித்தார். விஜயகுமார் நன்றி கூறினார். பிரதிநிதிகள் மாநாட்டில் இந்து அரையர் சமுதயா மக்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து ஆணை பிறப்பித்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தும், சுனாமியால் பாதிக்கப்பட்ட வள்ளவிளை, மேடவிளாகம், கல்லடிதோப்பு பகுதியை சேர்ந்த குடும்பங்களுக்கு அரசு உதவி தொகை வழங்க கேட்டும் மற்றும் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக