முத்தரையர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
First Published : 09 Jul 2010 11:16:25 AM IST
Last Updated :
திருச்சி, ஜூலை 8: திருச்சியில் முத்தரையர் சங்கத்தினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு முத்தரையர் சங்கத்தின் இளைஞர் அணி சார்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாநில பொதுச் செயலர் மரு. பாஸ்கரன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை மாவட்ட துணைத் தலைவர் எம். சிவராஜ் தொடக்கிவைத்தார்.
பல்வேறு ஜாதி பெயர்களில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள முத்தரையர்களை ஒன்றாக இணைத்து கல்வி, வேலைவாய்ப்புகளில் 20 சத தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
இல்லையெனில், பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள முத்தரையர்களுக்கு 15 சதமும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ளவர்களுக்கு 5 சதமும் தனி உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாவட்டச் செயலர் வி.எம். தங்கவேல், பொருளாளர்
எம்.பி. குஞ்சான், நிர்வாகிகள் ஆர். ராஜமாணிக்கம், பி. மூர்த்தி, எஸ். விஸ்வநாதன், ஆர். பிரவீன், கே. ஜயச்சந்திரன், எம். சேகர், எம். மூர்த்தி, ஜி. ரெங்கராஜ், டி. சண்முகம், வி. சடையன், ராணி செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக