எனதருமை நண்பர்களே....! வணக்கம் நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் உங்களோடு கருத்து பகிர்வதற்கு உண்மையிலையே சந்தோசமாகவே உள்ளது. சமிபத்தில் நமது சமுதாய இளைஞர்கள் திருச்சியில் ஒரு கலந்துரையாடல் நடத்தினார்கள் உண்மையிலையே இது போன்ற சந்திப்புக்கள் நிச்சயமாக நல்ல பலனை விரைவில் தரும் என்று நான் நம்புகிறேன். மேலும் அன்றைய நாளில் அவர்களின் விவாதத்தில் இடம் பெற்ற முக்கியமான விஷயம் நம்மவர்களை அடையாளம் கண்டுகொள்ள நம்மவர்கள் உள்ள ஊரின் முகப்பில் பெரும்பிடுகு முத்தரையரின் படம் பொறித்த வரவேற்பு பலகை வைக்க வேண்டும் என்பதாக இருந்துள்ளது. நல்ல கருத்து வரவேற்ப்போம். மேலும் இதனைப் பற்றிய எனது சிந்தனையில் தோன்றிய ஒரு விசயத்தினை உங்களோடு பகிந்துக் கொள்ள விரும்புகிறேன்..
ஆம் தமிழகம் முழுவதும் 10 ற்கு மேற்பட்ட குடும்பங்களாக முத்தரையர்கள் வாழ்வார்கலேயானால் அங்கெல்லாம் " முத்தரையர் உறவின் முறை சங்கம்" அமைக்கப்படவேண்டும் (அதற்கும் குறைவானவர்கள் அருகில் உள்ள ஏதேனும் ஒரு சங்கத்தில் பதிவு செய்தல் வேண்டும்), இந்த சங்கத்தை ஒரே கிராமத்தில் இரண்டாகவோ, மூன்றாகவோ அவர்களின் விருப்பப்படி அமைத்துக் கொள்ளலாம் (இதன் மூலம் ஒவ்வொரு பங்காளி வகையறாவும் ஒவ்வொரு சங்கத்தினை வைத்துக்கொள்ளலாம்) (இதன் மூலம் சண்டை, சச்சரவுகள் குறையும்) , இதில் உறுப்பினராக சேர வயது வரம்பு கிடையாது ( ஒரு குடும்பத்தில் உள்ள அனைவரும் சேர்த்தல் அவசியம்) , முத்தரையர் என்ற ஒரு தகுதி மட்டும் போதுமானதாகும், மேலும் இந்த சங்கத்தினை கட்டுபடுத்தும் அதிகாரம் யாருக்கும் கிடையாது (உதாரணம்: முத்தரையர் சங்கம், முத்தரையர் முன்னேற்ற சங்கம், முத்தரையர் இளைஞர் எழுச்சி இயக்கம், இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்,..... உள்ளிட்ட யாருக்கும்) " முத்தரையர் உறவின் முறை சங்கத்தில் இருப்பவர்கள் விருப்பபடி முடிவுகளை எடுத்துக்கொள்ளலாம். இதன் பிரதான நோக்கம் ஒருவர் பெண் கொடுப்பதோ, எடுப்பதோ இருவிட்டரும் ஏதேனும் ஒரு முத்தரையர் உறவின் முறை சங்கத்தில் உறுப்பினராக இருப்பது அவசியம், இதன் மூலம் நம்மவர்களின் எண்ணிக்கைப் பற்றிய சரியான தகவல்களை திரட்டிட முடியும் (மேலும் சமுதாயத்தில் ஏற்படும் கலப்புகளையும் களைய முடியும்). மேலும் அருகில் இருக்கும் சங்கத்தினருடன் உறவுகளை பேன முடியும், குழுவாக இயங்குவதன் மூலம் ஒரு திடமான இனமாக மாற முடியும்.
இதனைக் குறித்த உங்களின் மேலான கருத்துகளையும் மேலும் இதனை எவ்வாறு? எப்படி? யாரின் மூலம் நடைமுறைப் படுத்துவது என்பது பற்றி உங்களின் ஆலோசனைகளையும் அன்போடு எதிநோக்குகிறேன்...
என்றும்
உங்களின்..........
சஞ்சய்காந்தி அம்பலக்காரர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக