ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010

முத்தரையர் சங்கத்தின் ஆலோசனை கூட்டம்பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 30,2010,00:57 IST

பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை அடுத்த பேராவூரணியில் தமிழ்நாடு முத்தரையர் சங்கம் மற்றும் தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கம் சார்பில் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.


சேதுபவாசத்திரம் யூனியன் துணைத்தலைவர் ராமையன் தலைமை வகித்தார். தஞ்சை மாவட்ட முத்தரையர் முன்னேற்ற சங்க தலைவர் முருகையன் முன்னிலை வகித்தார். யூனியன் கவுன்சிலர் சுப்பிரமணியன் வரவேற்றார். தமிழ்நாடு முத்தரையர் சங்க மாநிலத்தலைவர் குழசெல்லையா பேசினார். மூன்று பிரிவாக செயல்படும் முத்தரையர் சங்கங்கள் ஒரே தலைமையின் கீழ் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு ஒப்புதல் அளித்த மத்திய அரசுக்கு பாராட்டு தெரிவிப்பது. முத்தரயைர் அனைவரையும் ஒரே தலைமையின் கீழ் எம்.பி.சி., என அறிவிக்க வேண்டும் எனக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக