புதுச்சேரி: புதுச்சேரி செம்படுகை நன்னீரகம், பூவுலகின் நண் பர்கள் இயக்கம் சார்பில் நேற்று முத்தரையர் மேல்நிலைப்பள்ளியில் கருத்தரங்கம் நடந்தது."உயிரியப் பன்மயமும் இயற்கை வேளாண்மையும்' என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கிற்கு செம்படுகை நன்னீரகத்தின் தலைவர் ராம்மூர்த்தி தலைமை தாங்கினார். பூவுலகின் நண்பர்கள் இயக்கத் தலைவர் சீனு தமிழ்மணி வரவேற்றார். விழாவையொட்டி புதுவை தமிழ் நெஞ்சனின் "முள்வேலி' துளிப்பா என்ற மலரை மதுரையை சேர்ந்த தாளாண்மை உழவர் இயக்கத்தை சேர்ந்த பாமயன் வெளியிட்டு பேசினார்.விழாவில் செம்படுகை நன்னீரக நிர்வாகிகள் தாமரைக்கோ, அரிமாப்பாண்டியன், ஜெயபாலன் ஆகியோர் பேசினர்.
செம்படுகை நன்னீரகத்தின் துணை செயலாளர் சீனுவாசன் நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக