இன்று ஒரு தகவல் - தமிழ்
[செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-07-17 08:44:15| யாழ்ப்பாணம்]
உலக நாடுகளை எல்லாம் சுற்றிப்பார்த்து விட்டு அன்பர் ஒருத்தர் வந்தார். அவர் சொன்னார்: நான் அமெரிக்கா போயிருந்தேன். நயாகரா நீர்விழ்ச் சியைப் பார்த்தேன். அங்கே முகப்பில் நல்வரவு என்று எழுதியிருந்தது. இங்கே ஏன் தமிழில் எழுதி வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டேன்.
“உலகத்தில் மூத்த மொழி-தமிழ் உயர்ந்த மொழி தமிழ் உலகத்தின் உயர்ந்த நீர்வீழ்ச்சி - நயாகரா அதனால் தான் அதை இங்கே எழுதி வைத்திருக்கின்றோம்” என்றார்கள். ஜப்பானிய பல்கலைக்கழக வாயிலில் யாதும் ஊரே... யாவ ரும் கேளிர்- என்ற சங்கத்தமிழ்ப் பாடல்வரியை மொழி பெயர்த்து எழுதிவைத்திருக்கிறார்களாம். ஜெருசலேம் நகரிலுள்ள ஒலிவ் மலையில் கிறிஸ்தவக் கோயில் ஒன்றில் இயேசு கற்பித்த வழிபாட்டுக் கருத்து உலகத் திலுள்ள 68 மொழிகளில் எழுதப்பட்டிருக்கிறது. அதில் இந்திய மொழிகளில் தமிழ் மட்டுமே இடம் பெற்றிருக்கிறது.
புத்தர் தமிழ் படித்தார் என்று மிகப்பழைய வட மொழி நூல் இலலித விசுதாரம் தமிழைப் புகழ்ந்து பேசுகிறது. என் கல்லறையில் ஈஒரு தமிழ் படித்த மாணவன்டுஎழுதி வையுங்கள் என்றார் போப். திருக்குறளைப் படிக்க நான் தமிழனாக பிறக்க விரும்புகின்றேன். என்றார் இந்தியாவின் தேசத் தந்நை மகாத்மா காந்தி. இப்படி அவர் சொல்லிக் கொண்டே வந்தார். ”அது சரி...தமி ழுக்கு வயது என்ன தெரியுமா என்றார்?” உடனே நான் “கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றி...” என்று ஆரம்பித்தேன்.
உணர்ச்சி பூர்வமாகப் பேசாதீங்க. உணர்வு பூர்வமாகப் பேசுங் கள்டுடுஎன்றார். நான் அடங்கிப் போய்விட்டேன். அதன் பின் சொன்னார்; தமிழின் தோற்றம் தோராயமாக கி.மு.50 ஆயிரம் என தமிழ் வரலாறு என்ற நூலில் மொழியியல் அறிஞர் பாவணர் குறிப்பிட்டிருக்கிறார். இயேசு பிறப்பதற்கு 500 ஆண்டுகளுக்கு முன்பே தொல் காப்பியம் என்ற இலக்கண நூல் நம்மிடம் இருந்தது. இயேசு பிறந்த 500 ஆண்டுகளுக்குப் பின் தோன்றிய மொழி ஆங் கிலம்.
தமிழ் மொழி - உலக மொழிகளுக் கெல்லாம் தாய் மொழி அது தோன்றிய இடம் குமரிக்கண்டம். அங்கிருந்து தான் பல நாடுக ளுக்குப் போய்க் குடியேறினார்கள். மங்கோலிய சீன மொழிகழுக்கும் தமிழுக்கும் உறவு உண்டு என்கிறார் கார்டுவெல். இந்தோ ஜரோப்பிய மொழிகளும் தமிழும் நெருங்கியவை என்கிறார் ஆங்கில அறிஞர் ஜி.யு.போப் அவர்கள். ஹங்கேரித துருக்கிதபின்னிசு போன்ற “பின்னோ - உக்ரியன் மொழிகள் தமிழிலிருந்து பிறந்தவைடுடு என்கிறார் காபோர் சென்த் கொதல் நய் சுமேரிய மொழிக்கும் தமிழுக்குமுள்ள உறவைச் சுட்டிக் காட்டுகிறார் லோகநாத முத்தரையர்.
எலாமைட் மொழிக்கும் தமிழுக்கும் தொடர்பு உண்டு என் கிறார் மக் ஆல்பின். கொரியன் மொழிக்கும் தமிழுக்கு உள்ள உறவை விளக்கியுள்ளார்.அல்பேர்ட். ஜப்பானிய மொழிக்குத் தமிழே மூலம் என்கிறார் ஓனோ. ஆபிரிக்க மொழிகளுக்கும் தமிழுக்கும் உள்ள உறவைச் சொல்கிறார் செங்கோர். “பாசுக்குடுமொழி உலகளாவிப் பரவிய பண்டைத் தமிழ் மொழியின் ஒரு கூறே என்கிறார் இலாகோவாரித அவுஸ்திரேலியப் பழங் குடிகள் பேசிய மொழிகள் தமிழோடு கொண்டுள்ள உறவை அறியத் தருகிறார் சமன்லால்.
உலகம் சுற்றி வந்த நண்பர் இப்படி நிறையச் செய்திகளைச் சொல்லிக் கொண்டே போனார். “ -“அதுசரி... ஏன் இப்படி இதயயல்லாம் என்னிடம் சொல்கி றீர்கள்?”என்று கேட்டேன். “ -“தமிழ் பேசுபவர்களுக்குத் தமிழ் மொழியைப் பற்றித் தெரிய வேண்டுமல்லவா ... அதற்காகத்தான்” என்றார். “என்ன இப்படிச் சொல்றீங்கள்... எங்களுக்குத் தமிழைப் பற்றித் தெரியாதா?” என்றேன்.
“அது இருக்கட்டும் உங்களுக்கு 1330 திருக்குறளும் ஒழுங்காகத் தெரியுமா?”என்று கேட்டார். நான் மறுபடியும் தலையைக் குனிந்து கொண்டேன். அவர் கேடட்பது நியாயம் தான். அன்றைக்கு ஒரு சின்னப்பையனைப் பார்த்துக் கேட்டேன். தம்பி... உனக்கு எத்தனை திருக்குறள் தெரியும்? என்றேன். “எனக்கும் 3000 திருக்குறள் தெரியும் என்றான். “ஏனப்பா மொத்தம் இருப்பதே 1330 திருக்குறள் தானே... 3 ஆயிரம் தெரியும் என்கிறாறே..?”என்றேன்.
“ஏன் சேர் தமிழ் வளரவே கூடாதா?” என்று சொல்லி விட்டு ஓடுகிறான். இவனெல்லாம் எந்தக்காலத்தில் வளர்வது?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக