Tuesday, August 10, 2010
வரவேற்பு
அனைவரையும் இருகரம் கூப்பி வரவேற்கிறது-வடகாடு கிராமம்
இவ்வூர் மக்களின் ஆணித்தனமான கூற்று...
எப்பேர்ப்பட்ட வனத்துல போயி மேஞ்சாலும்,
கடைசியா இனத்துல போயித்தான் அடையணும்!
-அதுபோல இவ்வூர் இளைஞர்கள் கடல் கடந்து போனாலும் தன் மண்வாசனை பிறழாமல் பிரதிபலித்து மீண்டும் இவ்வூரிலே எதிரொலிக்கும் இளைய சமுதாயத்தினர்.
"உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்" - என்கிறது குறள்.
எவ்வித பேதமும் இன்றி விவசாயம் ஒன்றே தொழில் அதுவே வாழ்வாதாரம் என்று காலத்தின் கண்ணாடியில் தினம் தினம் செத்து பிழைக்கும் கூட்டம் இந்த விவசாயிகள் கூட்டம்.
வடகாடு கிராமம் ஒரு சிறந்த ஒற்றுமையுடன் கூடிய கிராமத்துக்கு எடுத்துகாட்டு ஆகும்.காரணம் இக்கிராமத்தில் உள்ளடங்கிய பதினெட்டு பட்டிகளும் ஒரே சமூகமான முத்தரையர் என்ற வகுப்பினுள் அம்பலகாரர் என்ற இனத்தை சேர்ந்தவர்கள்.ஆகையால் இப்பகுதில் எவ்விதமான இனப்பிரச்சனையும் எழுவதில்லை.2006 ஆண்டு மக்கள் கணக்கெடுப்பின்படி 7,894 மக்கள் வசிக்கின்றனர்.பட்டிக்கு(தெரு) தலா நூறு குடும்பம் வீதம் மொத்த குடும்பங்கள் எண்ணிக்கை 1,800 உள்ளது.வீட்டுக்கு ஒரு ஆண் பிள்ளை வீதம் பதினைந்து வயதுக்கு குறைவாக உள்ளனர் ஆகையால் இளைஞர்கள் பரவாக உள்ளனர்.இப்பகுதியில் மக்களிடையே தமிழ் மொழிப்பற்று சற்று மிகுதியாகவே காண முடிகிறது அது படித்தவரானாலும் சரி படிக்காதவரானாலும் சரி தமிழ்மொழி,தமிழ்இனம் என்று முன்மொழிவதை மிகுதியாகக்காண முடியும்.
வரலாறு
வடகாடு என்ற கிராமம் முற்றிலும் மிக குறுகிய காலத்திற்குள் உருவாக்கப்பட்ட கிராமம் ஆகும்.அது எவ்வகையில் என்றால் இப்பகுதில் எந்தவொரு கட்டிடமோ,வீடுகளோ அல்லது பழங்காலத்தை வெளிப்படுத்தும் அடையாளங்ககளோ காணப்படவில்லை.மேலும் இக்கிராமத்தின் ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தின் வழியாகவே வரலாற்றை கொணர முடிகிறது.அந்த வகையில் என்னுடைய பார்வையில் இக்கிராமம் பத்தொன்பதாம் நூற்றாண்டில் உருவாகி இருக்கலாம்.மேலும் இப்பகுதியில் மிகுந்த தமிழ் ஆர்வலர்கள் காணப்படுவதற்கு சில முக்கிய காரணங்கள் உள்ளன.அதாவது ஆங்கிலேயர் காலத்தில் சிரிவர்தனபுரம் என்ற இலங்கைக்கு 1800ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் இந்தியாவிலிருந்து குறிப்பாக தென்இந்தியாவிலிருந்து பல குடும்பங்களை தேயிலை தோட்டப் பணிக்காக இலங்கையில் உள்ள மலையகத்திற்கு கொண்டு சென்றனர்.அந்த விபரம் மிக கொடுமையானது ஏனென்றால் பல வாக்குறுதிகளை சொல்லி அழைத்து சென்றவர்கள் மன்னார் வளைகுடாவரையில் கப்பலில் அழைத்து சென்றவர்களை இறக்கிவிட்டு மன்னாரிலிருந்து கண்டியிலுள்ள மலையகம் வரையில் கால் நடையாகவே சுமார் 1450 மைல் கொண்டு சென்றனர்.அப்போதுதான் நாம் ஏமாற்றப்பட்டோம் என்று புரிந்துகொண்டும் வேறு கெதியில்லாமல் அங்கேயே பல குடும்பங்கள் அழிந்தன மீதமிருந்த குடும்பங்கள் ஜெர்மனி,இங்கிலாந்து,கனடா என்று நாடு கடந்து தப்பித்தனர்.எஞ்சிய குடும்பங்களின் வாரிசுகளே இன்று இந்த கிராமத்தில் உள்ள தமிழீழ ஆதரவாளர்கள்.அவர்கள் ரத்தத்தில் விம்மும் மன குமுரல்களே இன்று போராட்டமாக வெடிக்கிறது.இதில் என்ன ஒரு ஆச்சரியம் என்றால் இன்று பல இளையதலைமுறையினர் எதுக்காக நாம் இலங்கைத்தமிழர்களுக்கு ஆதரவளிக்கிறோம்! ஏன் நமக்கு மனதளவில் வலிக்கிறது என்று அறியாமலே போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.அதாவது இவர்களின் முன்னோர்கள் இலைங்கையில் பட்ட துரதிஷ்டவசமான இன்னல்களின் கோபம்,எரிச்சல் இவையனைத்துமே ரத்தத்திலே ஊறியுள்ளது.அதே காலப்பகுதியில் இப்பகுதியின் தற்போதைய தென்பகுதியில் உள்ள ஆற்றுப் பகுதியின் கரையோரங்களில் விவசாயம் செய்து வாழ்ந்தவர்கள் சில குடும்பங்களே அவர்களே வடகாட்டான் கரைக்காரர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக