வியாழன், 5 ஆகஸ்ட், 2010

இலவச நோட்டு புத்தகம் வழங்கல்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை நகர முத்தரையர் உறவின் முறை டிரஸ்டின் மாணவ, மாணவியருக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழா நடந்தது. மகளிர் குழு நிர்வாகி லதா, குத்து விளக்கேற்றினார். அமைப்பாளர் ஜெயக்கொடி வரவேற்றார். நிறுவனர் சின்னகருப்பன் வரவு, செலவு கணக்கு வாசித்தார். தேர்தல் அலுவலர் ராமச்சந்திரன், துணை தலைவர் குருநாதன் சிறப்புரையாற்றினர். வக்கீல் மதிச்செல்வன் நோட்டு, புத்தகங்கள், எழுது பொருட்களை வழங்கினார். செயலாளர் பெரியசாமி நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக