வியாழன், 5 ஆகஸ்ட், 2010

சிறுமுகை பாலத்தை சீரமைக்க கோரிக்கை

மேட்டுப்பாளையம்: பவானி ஆற்றின் குறுக்கே கட்டியுள்ள பாலத்தில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்ய,அரசிடம் முத்தரையர் சங்கம் கோரியுள்ளது.சிறுமுகை லிங்காபுரத்தில் தமிழ்நாடு முத்தரையர் சங்கக்கிளையின் 25வது ஆண்டு விழா நடந்தது. கிளைத் தலைவர் வெள்ளிங்கிரி தலைமை வகித்தார். கோவை மாவட்ட தலைவர் ரங்கசாமி கொடியேற்றினார். செயலாளர் பழனிசாமி பெயர்ப்பலகையை திறந்து வைத்தார். மாநில துணைத் தலைவர் ராஜன், மாவட்ட துணைத் தலைவர் ரங்கசாமி, பொருளாளர் குப்புசாமி உட்பட பலர் பேசினர். லிங்காபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவியர் 88 பேருக்கு இலவச நோட்டுகளும், தண்ணீர் ஊற்றி வைக்க எவர் சில்வர் டிரம் வழங்கினர். மேட்டுப்பாளையம் - கோவை பாசஞ்சர் ரயிலை நிரந்தரமாக்கி தொடர்ந்து இயக்க வேண்டும். பவானி சாகர் அணையில் நீர் மட்டம் 90 அடியை எட்டியதும், காந்தையாற்றின் குறுக்கே கட்டியுள்ள பாலம் தண்ணீரில் மூழ்கி விடுகிறது. பள்ளி மாணவ, மாணவியர், பொதுமக்கள் ஆகியோர் ஆபத்தான நிலையில் பரிசலில் பயணம் செய்ய வேண்டியுள்ளது. இப்பாலத்தை உயர்த்தி கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.இப்பாலத்தின் மையப்பகுதியில் விரிசல் ஏற்பட்டு இடிந்து விழும் நிலையில் உள்ளது. இப்பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. லிங்காபுரம் கிளை தலைவராக வி.வெள்ளிங்கிரி, துணைத்தலைவர் கணேசன், செயலாளர் சின்னு, துணைச் செயலாளர் வெள்ளிங்கிரி, சார்பாளர் மணிமோகன், பொருளாளர் நாச்சிமுத்து உட்பட செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். செயலாளர் சின்னு வரவேற்றார். செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணி நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக