செவ்வாய், 21 செப்டம்பர், 2010

யாருடன் கூட்டணி? முத்தரையர் மாநாட்டு முடிவு] நக்கீரன்

யாருடன் கூட்டணி? முத்தரையர் மாநாட்டு முடிவு]



தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் முத்தரையர் பேரவையின் பேராவூரணி சட்டமன்ற தொகுதி மாநாடு இன்று நடந்தது.



மாநிலத்தலைவர் ஆர்.விஸ்வநாதன் தலைமையில் இளைஞர்களின் அணிவகுப்பு பேரணி நடத்தப்பட்டது.இந்தப்பேரணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்துகொண்டனர்.


இரவு 7 மணிக்குப்பிறகு மாநாட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது இப்பொதுக்கூட்டத்தில் ஆர்.விஸ்வநாதன் மகன் நடிகர் பரதன் கோரிக்கைகளை விளக்கி தலைமை உரையாற்றினார்.



அவர், ’’சாதி வாரி கணக்கெடுப்பிற்கு ஒத்துழைப்பு கொடுத்த சோனியாகாந்திக்கும், முதல்வர் கருணாநிதிக்கூம் நன்றி தெரிவித்துக்கொளவதுடன் திருச்சி சென்ற முக.ஸ்டாலினிடம் முத்தரையர் இனத்தை மிகவும் பிற்படுத்தப்பட்ட இனத்தில் சேர்க்க வேண்டும் என்று பேரவையின் சார்பில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.



திருச்சி விழாவில் ஸ்டாலின் பேசும்போது, இந்த கோரிக்கை நிறவேற்றப்படும் என்று தெரிவித்தார்.
அதனால் அவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கொறோம்.



நம் சாதியினரைச்சேர்ந்த் பலரும் பல்வேறு பொறுப்புகளில் இருந்தாலும் சாதிகளைச்சொல்லி ஓட்டுகளை வாங்கி பதவிகளுக்கு



செல்லும் உள்ளாட்சி பிரதிநிதிகளூம் கட்சி தலமைக்கு பயந்து ஜாதியை மறந்துவிடுகின்றனர்.



எதிர்வரும் சட்டமன்றத்தேர்தலில் முத்தரையர் இனத்திற்கு தனி இட ஒதுக்கீடு, வேலை வாய்ப்பு,கல்வி, ஆகியவற்றிற்கு யார் முக்கியத்துவம் அளிக்கிறார்களோ அந்தக்கட்சியுடன் கூட்டணி அமைத்து அந்த கட்சியை ஆட்சியில் அமர வைப்பொம்’’என்று பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக