செவ்வாய், 21 செப்டம்பர், 2010

தன் சமூகத்திற்கு ஒதுக்கீடு கோரிய எம்.எல்.ஏ.,வால் பரபரப்பு - செய்தியும், கருத்துகளும்

திருச்சி : முத்தரையர் சமூகத்தினரை எம்.பி.சி., பட்டியலில் சேர்க்க வேண்டும் என, பகிரங்க கோரிக்கையை, காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஒருவர், முதல்வர் முன்னிலையில் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.



திருச்சி கலெக்டர் அலுவலக கட்டடத் திறப்பு விழாவில் பங்கேற்ற தொட்டியம் தொகுதி காங்., எம்.எல்.ஏ., ராஜசேகரன் பேசியதாவது: என் தொகுதியில் தடுப்பணை உள்ளிட்ட பல்வேறு பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தொட்டியம், தா.பேட்டை வழியாக கலைஞர் கால்வாய் எனும் புதிய திட்டத்தையும் உருவாக்க வேண்டும்.திருச்சி மாவட்டத்தில் முத்தரையர் சமூகத்தினர் அதிகமாக உள்ளனர். அதற்கடுத்தபடியாக தாழ்த்தப்பட்ட மக்கள் உள்ளனர். மாவட்டத்திலுள்ள பெரும்பான்மை தொகுதிகளில் முத்தரையர் சமூக மக்கள் அதிகமுள்ளனர்.அவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான, முத்தரையர் சமூகத்தினரை எம்.பி.சி., பட்டியலில் சேர்க்க வேண்டுமென்பதை முதல்வர் நிறைவேற்றித் தர வேண்டும். இந்தமுறை சட்டசபைத் தேர்தலிலும் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்க செய்ய வேண்டும். இவ்வாறு ராஜசேகரன் பேசினார்.



அரசு விழாவில், காங்கிரஸ் எம்.எல்.ஏ., தன் சமூகம் சார்ந்த கோரிக்கையை விடுத்ததைக் கேட்ட, விழாவில் பங்கேற்ற பிரமுகர்கள் முகம் சுளித்தனர். "ஒரு ஆளும் தேசிய கட்சியின் எம்.எல்.ஏ., பகிரங்கமாக அவரது, சமூகத்தினருக்கு பிரதிநிதித்துவம் கேட்டு அரசு விழாவில் கோரிக்கை விடுப்பது முறையல்ல' எனவும் முணுமுணுத்தனர்.




வாசகர் கருத்து (38)

thambrass balaji - tuticorin/tamilnadu,இந்தியா 2010-09-11 14:15:26 IST
very good Mr. Rajasekaran / Keep your Service In Your Community...

கே.ஜீவிதன் - villupuram,இந்தியா 2010-09-10 19:50:32 IST முதல்வர் எந்த சமுதாயத்திற்கு ஒதுக்கீடு கேட்பார்?...

மகேஷ் - usa,இந்தியா 2010-09-10 02:46:05 IST எலக்சன் வந்தாச்சு அல்லவா !!!!!...

ஸ்ரீராம் - டோஹா,கத்தார் 2010-09-09 23:55:34 IST
ஏன் ராஜசேகரனுக்கு மட்டும் தான் கேட்க தெரியுமா? எங்களுக்கும் கேட்க தெரியாதா? ஐயா so called முதல்வரே! பிராமண ஜாதியையும் எம்.பி.சி. யில் சேர்க்கும்படி கேட்டு கொள்கிறேன்.
எத்தனையோ செய்து விட்டீர்கள். இதை செய்ய முடியாதா?...

bala - try,இந்தியா 2010-09-09 23:44:19 IST

intha big manal(sand)thirudan ivanukku ellam oru jathi.... connoisseur - Mayura,இந்தியா 2010-09-09 21:59:26 IST உங்களில் எத்தனை பேர் இட ஒதுக்கீடு creamy layer எடுத்து விடுவதுக்கு சம்மதீப்பீர்கள்?...


கார்த்திக் - பெங்களூர்,இந்தியா 2010-09-09 20:22:51 IST
நன்றி ராஜசேகரன் ..... உமது குரல் நமது சமுதாய குரல்... ஆனா எனக்கு காங்கிரஸ் பிடிக்காது. தமிழரை கொன்ற கட்சி........

dfsd - madurai,இந்தியா 2010-09-09 19:22:47 IST
இட ஒதுக்கீட்டுக்காக, இப்படி ஒவ்வொருவரும் தங்களை தாங்களே தாழ்ந்தவர், மிகவும் பிற்பட்டோர் என்று தரம் தாழ்த்திக்கொண்டு, சமூகத்தில் சம உரிமையும் கோருகிறார்கள். இது பைத்தியக்காரன் உளறுவது போல் இல்லையா? அல்லது இவர்களுக்கு தமிழ் அர்த்தம் தெரியவில்லையா?...

தஞ்சை மறவன் இராமசாமி - நியூஜெர்சி,இந்தியா 2010-09-09 18:59:19 IST
ஜாதி வாரி கணக்கெடுப்பை எடுக்கும் படித்த மேதாவி காங்கிரஸ் அரசாங்கமே... பட்டியலை அனைத்து மக்களிடமும் கொடு. அனைவரும் சலுகைகளை எதிர்பார்க்கட்டும். நான் நினைக்கிறேன் இந்த ஜாதிவாரி கணக்கெடுப்பு, பாதுகாப்பு துறை-இல் உள்ளவர்களுக்கு பென்ஷன் கிடையாது என்பதெல்லாம் அந்நிய சக்திகளின் இந்தியாவை துண்டாடும் யோசனைகளின் மூலமோ என்று. எப்படியோ நம் அனைவருக்கும் தெரிந்த வகையில் மன்மோகன் அமெரிக்க வின் கை கூலி, சோனியா இத்தாலி-இன் கைக்கூலி, சசி தரூர் எனையே பிற மலையாள மன்னவர்கள் இலங்கை மற்றும் சீனத்தின் கை கூலிகள். அப்பாவி இந்தியனே உன் பிள்ளைகளின் தலைகளில் குண்டு விழும் பொது தான் புரியும், நீ செய்த தவறு என்னவென்று. அப்போது உன் கோவணத்தை கூட எடுத்துக்கட்ட திராணி இல்லாத மனிதனாய் நீ இருப்பாய்....

karthi - chidambaram,இந்தியா 2010-09-09 18:25:37 IST இதையே ராமதாஸ் சொல்லி இருந்தா வரி வரியா கசென்ட் எழுதுவிங்க. ஏன் இவர் ஜாதி வெறியர் அல்லவா....

arivazhagan - singapore,இந்தியா 2010-09-09 18:03:44 IST
ஒரு சமுகத்திற்கு கேட்பது தப்பில்லை. அதவும் கருணாநிதிகிட்ட குடும்ப அரசியலில் எது ஒன்னும் தப்பில்ல....


சஞ்சய்காந்தி - Sharjah,ஐக்கிய அரபு நாடுகள் 2010-09-09 16:45:03 IST
இந்த செய்திக்கு கருத்து தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி..! நண்பர்களே நாங்கள் எத்தனை கோடி பேர் இருந்தால் நீங்கள் எங்களுக்கு சலுகை தருவீர்கள்? காங்கிரஸ் கட்சியில் இருந்தால் அவர் பிறந்த சாதி இல்லை என்று ஆகிவிடுமா? உங்களில் எத்தனை பேர் சாதி பெயர் எழுதாத சான்றிதல்கள் வைத்திருக்கிறிர்கள் ? எத்தனை பேர் சாதி மாற்றி கல்யாணம் செய்துள்ளிர்கள்? நீங்கள் ஏளனம் செய்யும் முன்பு உங்களை பற்றி சுய சோதனை செய்துகொள்ளுங்கள், நீங்கள் எல்லாம் எதோ ஒரு வகையில் நீங்கள் பிறந்த சாதியை ஏதேனும் ஒரு இடத்தில பயன்படுதியிருப்பீர்கள். பொத்தம் பொதுவாக கருத்து சொல்ல உங்களைப் போலே பல ஆயிரம் பேர் உண்டு, காங்கிரஸ் கட்சியின் தலைவராக வாசன் இருந்த பொது வன்னியர் ஒருவர் தான் தமிழக காங்கிரஸ் தலைவராக இருக்க வேண்டும் என்று கிருஷ்ணசாமி நியமிக்கப் பட்டதை நீங்கள் அறிவீர்களா? தான் சார்ந்த சமுகம் பின் தங்கி இருப்பதைக் கூறினால் அவர் சாதி வெறியரா? சாதியின் பெயரால் மரங்களை வெட்டி ரோடில் இடுவதும், வீச்சரிவாள் கொண்டு சாதி கலவரம் செய்வதும் தொண்டோ?...

kannan - singapore,இந்தியா 2010-09-09 16:09:44 IST
இதுக்குத்தான் பொருளாதார அடிப்படை இல் இட ஒதுக்கிடு குடுக்க வேண்டும்...எல்லோரும் எம் பி சி இல் சேர்ந்தால் எப்படி இருக்கும்....?...

எஸ் எஸ் சாமி A P K - singapore,இந்தியா 2010-09-09 14:11:02 IST
ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க தீர்மானம் நிறைவேற்றி இருக்கும் இந்திய அரசும், ஜாதியை ஒழிப்போம் என்று சூளுரைத்து பல ஜாதிகட்சிகளால் குளிர்காய்ந்துகொண்டும், அதில் தன் குடும்ப வருமானத்தை பல கோடியாய் பெருக்கிக்கொண்டிருக்கும் பல குள்ளநரிகளுக்கு மத்தியில் தான் சார்த்த மக்களுக்களின் உரிமைகோரி அந்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் அந்த மக்களுக்காக போராடுவது பெருமைக்குரியதே .......

கார்த்திக் - kumbakonam,இந்தியா 2010-09-09 13:55:50 IST
இவரை போல சட்ட மன்ற உறுப்பினர் என் சாதியில் எவரும் இல்லையே. என்று இவருக்கு ஒட்டு போட்ட கிழ் சாதிகாரன் நினைப்பான்...

Mari - bangalore,இந்தியா 2010-09-09 13:29:42 IST
இது போன்ற கோரிக்கைகளை வேறு சில அரசியல்வாதிகளும் அவரவர் சமூகத்திற்கு விடுக்கின்றனர். ஒரு காலத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் என்ற நிலையில் இருந்து மக்களை முன்னேற்ற சில தலைவர்கள் போராடினர்.. ஆனால் இன்று சலுகைகளுக்காக தங்களை இன்னும் தாழ்த்தி கொள்ள இவர்கள் தயாராக உள்ளனர்....

sdfs - madurai,இந்தியா 2010-09-09 12:46:43 IST
தமிழக முதல்வர் முதல் அனைவரும் தங்களை தாங்களே பிற்படுத்தபட்டவர்கள், தாழ்த்தபட்டவர்கள் என கூறி தாழ்த்திக்கொண்டு, சம உரிமையும் கோருகிறார்கள்? இவர்களுக்கு தமிழ் வார்த்தைகளுக்கே அர்த்தம் தெரியவில்லையா? அல்லது பைத்தியம் பிடித்து அலைகிறார்களா?...

சாமி - MUSCAT,ஓமன் 2010-09-09 11:46:24 IST
தனி தமிழ் நாடு கேட்டுப்பார் அதுவும் நிறைவேற்றப்படும் .......................

மாரிஸ்.கே - சென்னை.,இந்தியா 2010-09-09 11:35:51 IST
ஒரு தெருபோறிக்கியோ ஜாதி கட்ட்சிகரனோ சொல்லி இருந்தா பரவாஇல்லை . நீ எல்லா ஜாதிக்கரனும் ஓட்டுபோட்டு தேர்ந்தெடுத்த எம்.எல்.ஏ. உங்க ஜாதிக்காரன் மட்டும் ஓட்டு போட்டா நீ எம்.எல்.ஏ ஆன. ஏ தொகிதி மக்களா பார்த்துக்குங்க . இந்த மாதிரி பாவத்துக்கெல்லாம் நாம ஆளாக கூடாது...

muthrayar - chennai,இந்தியா 2010-09-09 10:48:01 IST
கைப்புள்ள எங்களுக்குன்னு எந்த கட்சியும் இல்ல. நாங்க என்ன மரத்த வேட்டுவோம்னா சொல்றோம். எதுவும் தெரியாம பேசாத....

iindian - dubai,ஐக்கிய அரபு நாடுகள் 2010-09-09 10:12:00 IST
எல்லாம் அந்த ........./ ஆரம்பித்தது தான், இன்னும் தொடர்கிறது,!...

m . rajan - thiruvarur,இந்தியா 2010-09-09 09:55:50 IST
சாதிகள் இல்லையடி பாப்பா எத்தனை பேருக்கு தெரியும்? சகோதரரே சாதி இல்லாப்பள்ளி கூடங்கள் உண்டா? சாதி சாதி பார்க்காத மந்திரிகள் உண்டா?பொருளாதார ரீதியாக, திறமை முதலியவை கருத்தில் கொண்டே சலுகைகள் இருக்க வேண்டும். சாதிகளை பள்ளி கல்லூரிகளில் இருந்து நீக்க வேண்டும்.இவைகள் இல்லா பட்சதில் அவரவர் சாதிக்கு வேண்டியவற்றை கேட்டு பெறுவதோ போராடுவதோ தவிர்க்க முடியாது....

விஜய் - துபாய்,ஐக்கிய அரபு நாடுகள் 2010-09-09 09:03:07 IST
இவனோட ஜாதிக்காரங்க மட்டுதான் இவனுக்கு ஒட்டுப்போட்டுருப்பார்கள்? அதை ஏன் இவர் யோசிக்கவில்லை. ஜாதி வெறி பிடித்தவர்கள் இருக்கும் வரைக்கும் நாடு உருப்படாது. படிக்காதவர்கள் தான் ஜாதி ஜாதி என்று திரிகிறார்கள் என்றால் படித்த முட்டாள்களும் அப்படித்தான் இருக்கிறார்கள்....

சண்முகம் - குவைத்,இந்தியா 2010-09-09 08:47:14 IST
ஆமண்டா இவரு வந்துட்டாறு. நோவாம நோன்கெடுக்க ஜயா பல போராட்டம் பண்ணி MBC பெற்றாரு எம்.எல்.ஏ. ஒன்னுமே பண்ணாம கேட்கிறாரு? சரி பரவாயில்ல. கேட்கற ஆளு ஒட்டுமொத்த ஹிந்துக்களுக்கு கேளுங்கடா. மட்ற மதத்தினரை பாருங்கடா....

மதன் - கொள்ளிடம்,இந்தியா 2010-09-09 08:05:55 IST
கேட்டது சரிதாங்க, என்னோட வரி பணத்துல சிறுபான்மையினர்ன்னு எவன் எவனோ சலுகைகள கேட்கும்போது( கேட்டுட்டு பாகிஸ்தான், ஸ்ரிலங்கான்னு சப்போர்ட் பண்ணுறானுங்க) இவரு கேட்டா என்ன தப்பு?....

Balakrishnan.N - Tirunelveli,இந்தியா 2010-09-09 08:03:36 IST
இப்படி காமராஜர் நினைத்திருந்தால் தமிழ் நாட்டில் ஒரு நல்ல காரியம் கூட நடந்திருக்காது....

நாகேஷ் - பட்டுக்கோட்டைகொள்ளுக்காடு,இந்தியா 2010-09-09 07:53:18 IST
நன்றி தன்மான சிங்கமே உன்னை வணங்குகிறோம். வாழ்க உன் புகழ். அனைத்து கட்சியில் உள்ளர்வர்களும் இதனை கடைபிடிக்க வேண்டுகிறோம். வாழ்க நம் சமுதாயம்......

மணிகண்டன் - தமிழ்நாடு,இந்தியா 2010-09-09 07:44:44 IST
மு அமானுல்லா,காங்கிரஸ் கட்சியின் உண்மையான கொள்கை கோட்பாடுகள் தியாகம் வரலாறு எல்லாம் சரிதான். அனால் இப்போது இருப்பது உண்மையான காங்கிரஸ் அல்ல என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இளங்கோவன் சொல்கிறாரே காமராஜர் ஆட்சி. அந்த காமராஜரை, கட்சியை விட்டு நீக்கி, வீட்டு காவலில் வைத்தார்கள். நேருவிற்கு பிறகு நிஜ காங்கிரஸ் இல்லை, இப்போது உள்ளது இந்திரா காங்கிரசின், தொடர்ச்சியான சோனியா காங்கிரஸ்தான்....

ரவி - திருச்சி,இந்தியா 2010-09-09 07:19:38 IST
கோரிக்கை வைக்க ஒவ்வொரு குடிமகனுக்கும் மக்கள் பிரதிநிதிக்கும் உரிமை உண்டு. அதை அரசு விழாவில் வைக்காமல் வேறு எங்க வைப்பார்கள். ஆனால் முத்தரையர் சமூகத்தினரை அதுவும் முதன் முதலில் சட்ட மன்ற உறுப்பினர் ஆன குளித்தலையில் முத்தரையர் மூலம் வோட்டு வாங்கி வெற்றி பெற்று அவர்களுக்கு ஒன்றுமே செய்யாத கருணாநதி, பிள்ளையை கிள்ளி விட்டு தொட்டில் ஆட்ட பார்க்கிறார்....

பாஷா.J - DUBAI,இந்தியா 2010-09-09 06:14:24 IST
பாவம் இந்த கலைஞர் மாட்டிகிட்டு முழிக்கிறார்!!!!!!!!!!!!!தமிழ் நாட்டில் மொத்தம் எவ்வளவு ஜாதி இருக்குதுன்னு ஒரு லிஸ்ட் எடுத்து கொடுத்தா கிண்ணஸ்ல சேர்த்துடலாம்....

சர் குமார் - Chicago,இந்தியா 2010-09-09 06:04:40 IST
எங்க வீட்டுக்கு தனி ஒதுக்கீடு தரும் படி கேட்டுக்கொள்கிறேன் . இப்படிக்கு அவுஸ் வோநர்...

ராம் - சிங்கப்பூர்,சிங்கப்பூர் 2010-09-09 03:11:18 IST
வயல்னு ஒன்னு இருந்தா இந்த மாறி ஜாதி வெறி புடிச்ச களை இருக்கத்தான் செய்யும். நாமதான் வேரோட புடிங்கி எறியணும். இல்லாட்டி நெல்லுக்கு பாயுற தண்ணி புல்லுக்கு பாயுற கதையா ஒண்ணுக்கும் ஒதவாம கெட்டு குட்டி செவுரா போய்டும்....

சாமி - கோவை,இந்தியா 2010-09-09 01:48:34 IST
கிளம்புங்கய்யா. எல்லாரும் கேட்போம். நடப்பது நடக்கட்டும். எல்லாருக்குமே உரிமை இருக்கு இல்ல. கேட்டு பாப்போம் கிடைச்சா சரி. கிடைகலன்னாலும் சரி. ஒரு விளம்பரம் இருக்குமில்ல....

C Suresh - Charlotte,யூ.எஸ்.ஏ 2010-09-09 01:46:31 IST
Only in India you can see people compete to become MOST BACKWARD class.... When is this religion/caste and reservation going to be over....

கே.கைப்புள்ள - nj,இந்தியா 2010-09-09 01:07:56 IST
இவருடைய சமூகத்திற்கென்று இதுவரை யாரும் தனியாக கட்சி ஆரம்பிக்கவில்லையா? இல்லையென்றால் உடனே ஒரு கட்சியை ஆரம்பித்து தனிநாடு கேட்கவும். மறக்காமல் நீங்கள் எவ்வளவு கோடி பேர் இருக்குறீர்கள் என்பதை குறிப்பிடவும்....

சந்திரசேகரன் - Chennai,இந்தியா 2010-09-09 00:59:18 IST
இது போன்று காங்கிரஸ் எம் எல் எ, எம்பி, போன்றோர் திமுகவிற்கு ஜால்ரா அடிப்பதை எந்த ஒரு காங்கிரஸ் காரனும் பொறுத்து கொள்ள மாட்டான். வரும் தேர்தலில் திமுக கூட்டணி தொடருமேயானால், பெரும்பாலும் காங்கிரஸ்காரர்கள் அதிமுக அல்லது விஜயகாந்தை ஆதரிக்க கூடும்....

malar - trichi,இந்தியா 2010-09-09 00:44:31 IST
எல்லாம் எங்களுக்கும் தெரியும் ,இப்படி எல்லாம் கலைஞர் கேட்கசொல்லி சொல்லி கொடுதிருப்பார் ,அப்போதானே ஐஜெகே கட்சிக்கு யாரும் போக மாட்டார்கள் .இது அந்த கட்சிக்கு மறைமுகமாக விடுத்த எச்சரிக்கை ,இப்படி கேளு நான் செய்வதுமாதிரி செய்து ஓட்டை பிரித்துவிடலாம் என்று அரசியல் சூது நடத்தி இருகிறார்கள் இருவரும் ....


மு அமானுல்லா - Dubai,ஐக்கிய அரபு நாடுகள் 2010-09-09 00:29:50 IST
இன்றைய காங்கிரஸ் தலைவர்கள் பெரும்பாலானோருக்கு காங்கிரஸ் கட்சியின் உண்மையான கொள்கை கோட்பாடுகள் தியாகம் வரலாறு முதலியானவை எதுவும் தெரியவில்லை. மொத்ததில் அவர்கள் கட்சியினை வைத்து பிழைப்பு தான் நடத்துகின்றனர். பதவியில் இருக்கும் பொழுது தான் அவர்களை பொது விழாக்கள் ஏன் கட்சி விழாக்களில் கூட பார்க்க முடியும். பதவியில் இல்லையென்றால் அவர்கள் தன் சொந்த தொழில்களை கவனிக்க போய்விடுவர். இது நம் உள்துறை அமைச்சருக்கும் பொருந்தும். எனவே இந்த எம்.எல்.ஏ. பேசியது ஆச்சரியபடத்தக்க நிகழ்வு ஒன்றும் இல்லை....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக