புதுதில்லி, செப்.9: பல்வேறு அரசியல் கட்சிகளின் வேண்டுகோளுக்கிணங்க, ஜாதிவாரியாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. எனினும் தற்போதைய மக்கள்தொகை கணக்கெடுப்பு இல்லாமல் ஜாதிவாரி கணக்கெடுப்பை தனியாக அடுத்த ஆண்டு நடத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது.
அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இவ்விவகாரத்தில் பல்வேறுகட்ட கலந்தாலோசனைகளுக்குப் பின் வீட்டுக்கு வீடு ஜாதிவாரியாக கணக்கெடுக்கும் பணியை அடுத்த ஆண்டு ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை நடத்த மத்திய அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இதைத் தெரிவித்தார்.
பயோமெட்ரிக் உள்ளிட்டவைகளை இணைத்து அடுத்த ஆண்டு மார்ச்சுக்குள் தற்போதைய மக்கள்தொகை கணக்கெடுப்புத் திட்டம் முடிவடைந்த பின்னர், படிப்படியாக ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என சிதம்பரம் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக