செவ்வாய், 14 செப்டம்பர், 2010

மதுரை: முத்தரையர் சங்கத்தினர் போராட்டம்

மதுரை: முத்தரையர் சங்கத்தினர் போராட்டம்





மதுரை விமான நிலையத்துக்கு பெரும்பிடகு முத்தரையர் பெயரை சூட்டக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, முத்தரையர் சங்கத்தினர் நடத்திய போராட்டத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டனர்.



மதுரை அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து ஊர்வலமாக வந்த முத்தரையர் சங்கத்தினரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே போலீசார் தடுத்து நிறுத்தினர். தடையையும் மீறி முத்தரையர் சங்கத்தினர் பேரணியாக செல்ல முயன்றதால், போலீசாருக்கும் அவர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதன்பிறகு முத்தரையர் சங்க நிர்வாகிகள் மட்டும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குச் சென்று கோரிக்கை மனுவை கொடுத்தனர்.



மதுரை விமான நிலையத்துக்கு பெரும்பிடகு முத்தரையர் பெயரை சூட்டுவதோடு, மதுரை ரிங் ரோட்டில் அவரது சிலையை நிறுவ அனுமதி தர வேண்டும் என்று அவர்கள் தங்கள் கோரிக்கை மனுவில் கூறியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக