வியாழன், 21 அக்டோபர், 2010

முத்தரையர் சங்க பொதுக்குழு கூட்டம் - தினமலர்

திருச்சி: தமிழ்நாடு முத்தரையர் சங்கத்தின் அவசர பொதுக்குழு கூட்டம் நேற்று முன்தினம் திருச்சியில் நடந்தது.சங்க மாநில பொதுச்செயலாளர் பாஸ்கரன், செயலாளர் தங்கவேல், நிர்வாகிகள் ராஜமாணிக்கம், சண்முகம், ரங்கராஜ், பொருளாளர் குஞ்சான் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.



நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: முன்னாள் அமைச்சர் வெங்கடாச்சலம் கொலையின் பின்னணியில் மிகப்பெரிய சதிவலை பின்னப்பட்டுள்ளது. திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை பகுதிகளில் முத்தரையர் அரசியல் பிரமுகர்கள் மேல்மட்ட அரசியலில் கால் பதிக்க விடக்கூடாது என்ற நோக்கத்துடன் முத்தரையர் அரசியல் பிரமுகர்களை அச்சப்படுத்தும் விதமாக இக்கொலைச் சம்பவம் நடந்துள்ளது.எனவே, முன்னாள் அமைச்சர் வெங்காடச்சலத்தை கொலை செய்தவர்களை விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜாதிவாரி கணக்கெடுப்பு விரைவில் நடத்திடய தமிழக முதல்வரை தமிழ்நாடு முத்தரையர் சங்கம் கேட்டுக் கொள்கிறது. முத்துராஜா, முத்திரியர் மக்களை எம்.பி.சி., பட்டியலில் சேர்க்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக