வியாழன், 21 அக்டோபர், 2010

முத்தரையர் சங்க செயற்குழுக் கூட்டம் - தினமணி

திருச்சி, அக். 15: தமிழ்நாடு முத்தரையர் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, சங்கத்தின் மாநில பொதுச் செயலர் மரு. பாஸ்கரன் தலைமை வகித்தார். ராஜமாணிக்கம், சண்முகம், ரெங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஜாதிவாரி கணக்கெடுப்பை விரைவில் நடத்த ஆவண செய்ய வேண்டும். முத்தரையர் சமுதாயத்தினரை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும். முன்னாள் அமைச்சர் வெங்கடாச்சலம் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. சங்கச் செயலர் தங்கவேல், பொருளாளர் குஞ்சான், ஒன்றிய பொறுப்பாளர்கள் ஜெயச்சந்திரன், விஸ்வநாதன், மூர்த்தி, பாபு, ரமேஷ் உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக