சனி, 9 அக்டோபர், 2010

முன்னாள் அமைச்சர் கொலை! அதிமுக நகர செயலாளர் தோட்டத்தில் ஆயுதங்கள் கண்டெடுப்பு!

முன்னாள் அமைச்சர் கொலை! அதிமுக நகர செயலாளர் தோட்டத்தில் ஆயுதங்கள் கண்டெடுப்பு!





புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள வடகாடு பகுதியில் வசித்து வந்த வெங்கடாசலத்தை வியாழக்கிழமை இரவு அடையாளம் தெரியாத நபர்கள் வெட்டிக் கொன்று விட்டு காரில் தப்பினர்.



இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம், திருவோணத்தை அடுத்த அதம்பை கிராமம் தோப்புத் தெருவில் உள்ள திருமாங்குளம் அருகே ஒரு வெள்ளை நிற மாருதி கார் கேட்பாரற்று நின்றது.



அந்த காரின் ஸ்டியரிங், கதவு, இருக்கை ஆகியவற்றில் ரத்தக் கறை படிந்திருந்தது. காரின் பின் பக்க டயர் பழுதாகி இருந்தது. அதனால், இந்தக் கார் கொலையாளிகள் பயன்படுத்தியதாக இருக்கக்கூடும் எனத் தெரிகிறது.



கிராம மக்கள் கொடுத்த தகவலின் பேரில், வாட்டாத்திக்கோட்டை போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து காரை சோதனையிட்டனர். காரின் முன்பக்கக் கண்ணாடியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. அதில் கோவையிலுள்ள கடை முகவரி உள்ளது.



காரின் இருக்கையில் கோவையில் வாங்கிய இரு நகரப் பேருந்துகளின் டிக்கெட்டுகள் கிடந்தன. கார் எண் டி.எஸ்.ஜெ. 5834. கொலையாளிகள் தப்பிச் சென்றபோது, காரின் டயர் பழுதானதால் காரை அங்கேயே விட்டுச் சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும், வியாழக்கிழமை இரவு 10 மணிக்கு மேல்தான் இந்தக் கார் இங்கு நிறுத்தப்பட்டிருக்கும் என்று அதம்பை கிராமத்தினர் போலீழ்ôரிடம் தெரிவித்தனர்.



இந்நிலையில், கொலையாளிகள் நான்கு பேர் ஒரத்தநாடு நீதிமன்றத்தில் சரணடைந்ததாகத் தகவல் பரவியது. ஆனால், அது உண்மையில்லை என்று பின்னர் தெரிந்தது. எனவே, கொலையாளிகள் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஏதேனும் ஒரு நீதிமன்றத்தில் சரணடையலாம் என்பதால், மாவட்டத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் போலீழ்ôர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.



இந்நிலையில் கொலையாளிகள் கொலைக்கு பயன்படுத்திய அரிவாள், பட்டா கத்தி போன்ற ஆயுதங்கள் கரம்பக்குடி அருகே குமாரக்குளத்தில் உள்ள முன்னாள் அதிமுக நகர செயலாளர் கருப்பையா என்பவரின் தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த கரம்பக்குடி இன்ஸ்பெக்டர் ஆயுதங்கள் கிடந்த தோட்டத்திற்கு சென்று அவற்றை கைப்பறினார்.

கைப்பற்றப்பட்டுள்ள ஆயுதங்கள் வெங்கடாசலத்தை கொலை செய்ய பயன்படுத்தப்பட்டதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக