புதன், 13 அக்டோபர், 2010

நக்கீரன் செய்தி

புதுக்கோட்டை, வடகாடு, ஆலங்குடி, பேராவூரணி தொடங்கி பட்டுக்கோட்டைவரை இன்னும் பதட்டம் தணியவில்லை. கடைகள் பலவும் மூடப்பட்டிருக்க கடைத்தெருக்கள் வெறிசோடிக்கிடக்கின்றன. பஸ், கார், வாகனங்கள் என பலவும் சேதப்படுத்தப்பட்ட நிலையில்.. கடைகள் பலவும் எரிக்கப்பட.... ஏரியாவே கலவரக் காடாய்க் காட்சி தருகிறது. இவை மாஜி அ.தி.மு.க. அமைச்சர் வெங்கடாசலத்தின் படு கொலை ஏற்படுத்தியிருக்கும் ரௌத்திரப் பின்விளைவுகள். வெங்கடா சலம் படுகொலையான அதிர்ச்சித் தகவலை கடந்த நக்கீரன் இதழில்.... அதே சூட்டோடு தந்திருந்தோம்.

வெங்கடாசலம் படுகொலை செய்யப்பட்டவிதம், கொலைக்கும்பல் குறித்தெல்லாம் நாம் அதிரடி விசாரணையில் இறங்க... ஏகத்துக்கும் பகீரூட்டும் தகவல்கள் கிடைத்தபடியே இருக்கிறது. நம்மிடம் மனம் திறந்து பேசிய வெங்கடாசலத்தின் நண்பர் ஒருவர் ""அவர் மைத்துனர் மாசிலாமணிதான் ரியல் எஸ்டேட் பஞ்சாயத்துகள்ல அவரை இறக்கி விட்டார். அப்படி மன்னார்குடி தரப்பு அக்ரிமெண்ட் போட்ட நிலத்தில் இவர் தலையிட்டதால்தான் சங்கடமே'' என்றார் பதற்றமாய்.

நாம் வெங்கடாசலத்தின் நண்பர் சொன்ன நிலவிவகாரம் குறித்துத் துருவ ஆரம்பித்தோம். தன் மைத்துனர் மாசிலாமணி, முசிறி எக்ஸ் எம்.எல்.ஏ.ரத்தினவேல், வாணக்கன்காடு கருப்பையா, தி.மு.க.பிரமுகரான கருக்காகுறிச்சி பாஞ்சாலன் ஆகியோர்தான் வெங்கடாசலத்தின் கட்டப் பஞ்சாயத்துப் பார்ட்னர்கள். பல டீலிங்குகளை பண்ணிவந்த இந்த டீம்.. கடைசியாக தலையிட்டது ஒரு முஸ்லிம் பிரமுகருக்கு சொந்தமான நிலவிவகாரத்தில். அதில் என்ன நடந்தது?

நில விவகாரத்தை நன்கறிந்த அந்தப் பிரமுகர் நம் காதில் கிசுகிசுப்பாய்ச் சொன்ன தகவல் இதுதான்... ""தஞ்சை மாவட்டம் ஆவ ணத்தைச் சேர்ந்தவர் முகமது குத்தூஸ். இவருக்கு புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள புலிவலத்தில் மொத்தம் 203 ஏக்கர் நிலம் இருக்க... இதை சசிகலா தரப்பு வாங்கும் முயற்சியில் இறங்கியது.

டாக்டர் வெங்கடேஷின் மைத்துனர் பெயர் ஜவகர். இந்த ஜவகரின் மாமனார் ராஜா தம்பியின் சம்பந்தியான கண்டி யர், தனது உதவியாளரான திருப்பதி பேரில் இந்த நிலத்தை சிலகோடிகள் பேசி அக்ரி மெண்ட் போட்டு 5 லட்சத்தை அட்வான்ஸாகவும் கொடுத்தார். ஆனால் அக்ரிமெண்ட்டில் குறிப்பிட்டிருந்த தேதிக்குள் இந்தத்தரப்பு பணத்தை செட் டில் பண்ணவில்லை. அதனால் முகமது குத்தூஸ் இந்த நிலத் தை வேறுயாராவது கேட்டால் கொடுக்கும் நிலைக்கு வந்தார். இந்தத் தகவலை குத்தூஸின் நண்பரும் லாரி அதிபருமான ஆவணம் சுப்பிரமணி என்கிற எம்.எஸ். ஆலங்குடி வெங்கடா சலத்தின் காதில் போட... தன் டீமோடு போய்... தன் மைத்துன ரான மாசிலாமணியின் பெயரில் அந்த இடத்துக்கு ஒரு லட்ச ரூபாயை அட்வான்ஸாகக் கொடுத்து புது அக்ரிமெண்ட் போட்டார் வெங்கடாசலம்.’’பிறகு?’’

“இடத்தை விட்டுக்கொடுத்துட்டு மேற்கொண்டு 10 லட்சம் வாங்கிக்கிட்டு ஒதுங்கிடுன்னு திருப்பதிக்கு போன்ல சொன்னார் வெங்கடாசலம். திருப்பதியோ "அதெல்லாம் முடியாது. அது சின்னம்மா தரப்புக்காக அக்ரிமெண்ட் போடப்பட்ட இடம்'னு தீர்மானமா சொல்லிட்டார். இருந்தும் இது பத்திக் கவலைப் படாத வெங்கடாசலம் தரப்பு... இந்த இடத்தை புதுக்கோட்டை, ஆலங்குடி பகுதிகளில் சுப பாரதி என்ற பெயரில் கல்வி நிறுவனங்கள் நடத்தும் தனசேகரன் என்பவர்ட்ட ஒரு நல்ல விலைக்கு அக்ரிமெண்ட் போட்டு 35 லட்சத்தை லாபமா வாங்கிடிச்சி. இதில் 19 லட்சத்தை மாசிலாமணி உள்ளிட்ட தன் சகாக்களுக்கு கொடுத்துவிட்டு.. மிச்சம் 16 லட்சத்தை தன் வீட்டுக்கு எடுத்துட்டு வந்துட்டார் வெங்கடாசலம். தங்கள் நாலு பேரையும் 19 லட்சத்தை பிரிச்சிக்கச்சொல்லிட்டு... வெங்கடாசலம் மட்டும் மொத்தமா 16 லட்சத்தை எடுத்துக்கிட்டதை மாசிலாமணி உள்ளிட்ட அவரது சகாக்கள் விரும்பலை. இந்த நிலையில்தான் வெங்கடாசலம் கொல்லப்பட்டிருக்கிறார்'' என நில விவகாரத்தின் மோட்டிவ்வை ஒப்பித்தார் அவர்..

இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி மாசிலா மணியும் பாஞ்சாலனும் வெங்கடாசலத்தின் வீட் டுக்கு வந்தனர். வெங்கடாசலத்திடம் இருந்த பணத் தை... அவருக்கு 4 லட்சம் என்றும் மாசிலாமணிக்கு மூன்றரை லட்சம் என்றும் மாசிலாமணி பிரித்துக் கணக்கெழுத... இதைக்கண்டு கொதிப்பான வெங்கடா சலம்... ""என் பணத்தை பிரிக்க நீயாருடா? இனி என் வீட்டுப்பக்கமே வராதே..'' என காரசாரமாக சத்தம்போட... இதற்கு பாஞ்சாலன் ஏதோ சொல்ல.... அவரை நெஞ்சைப் பிடித்துக் கிழே தள்ளினார் வெங்கடாசலம். இந்த ரசாபாசத்தை வீட்டிலிருந்தவர்கள் பார்த்திருக்கிறார்கள்.


மறுநாள் 7-ந் தேதி மதியம். தனது பிள்ளையார் கோயில் திருப்பணியை பார்வையிட்டுவிட்டு மதிய சாப்பாட்டுக்கு வீட்டுக்குவந்தார் வெங்கடாசலம். அப்போது திருப்பதி போனில் வர...’"உனக்குத் தர 15 லட்ச ரூபாயை வீட்டில் வச்சிருக்கேன். வந்து வாங்கிக்க' என்று வெங்கடா சலம் சொல்ல.. திருப்பதிக்கும் அவருக்கும் போனிலேயே கடும் வாக்குவாதம். கண்டபடி கெட்டவார்த்தைகளை பேசித்திட்டிய வெங்கடா சலம்... உன் பிரச்சினையில தலையிட்டதுக்கு என்னை நானே செருப்பால் அடிச்சிக்கணும் என்றபடி கோபமாகப் போனை வைத்தார்.






மாலைநேரம். அப்போது அந்த மாருதி, அவர் வீட்டின் வாசலில் நின்றது. காரின் கத வருகே 786 என எழுதப்பட்டிருந்தது. அதிலிருந்து இறங்கிய டிரைவர்...’’ஐயா ஒரு பஞ்சாயத்துக்காக வந்திருக்கோம்’’ என்று சொல்ல..’’உள்ளே வாங் கப்பா’’ என்றார் வெங்கடாசலம். “""கார்ல முஸ் லிம் லேடீஸ் இருக்காங்க. இறங்கிவர சங்கடப்பட றாங்க. நீங்க கார்கிட்ட வாங்க’’ என்றார் டிரைவர். வெங்கடாசலம் யோசிக்க... இன்னொருவன் இறங்கிவந்து ""ஏன் கார்கிட்ட கூப்பிட்டா வரமுடி யாதா?'' என்றான் முரட்டுக்குரலில். இவர்கள் சரியான ஆட்கள் இல்லை என்பதை உணர்ந்து கொண்ட வெங்கடாசலம் அருகில் இருந்த தன் கார் டிரைவரிடம் தன் மகன் ராஜபாண்டியைக் கூப்பிடச் சொன்னார். டிரைவரோ அசையாது நிற்க... அந்த நபர் வேகமாக வெங்கடாசலத்தை நெருங்கினான். குபீரென தன் கையில் இருந்த அரிவாளை உயர்த்திக்காட்டி... அங்கிருந்த ஆசிரியர் செல்வராஜைப் பார்த்து ‘ஓடிப்போய்டு’ என்று மிரட்டினான். அவர் அலறியபடி வீட்டுக்குள் ஓடினார்.... பிறகு? வெங்கடாசலத்தின் மகள் தனலட்சுமியே விவரிக்கிறார்...’’

""ஐயோன்னு செல்வராஜ் சார் அலறிக்கிட்டு ஓடிவந்ததும் வாசலுக்கு ஓடிவந்தேன். அப்ப... ஒருத்தன் எங்க அப்பாவின் இடது கையைமடேர்னு வெட்டினான். எங்க அப்பா... கீழே விழுந்தாலும் ஒத்தைக் கையால் அவன் காலை இறுகப்பிடிச்சிக்கிட்டார். அய்யோ விட்ருங்கடான்னு நான் கத்தினேன். உடனே அவன் முண்டிக்கிட்டு ஓடினான். அப்ப கார்ல இருந்து இன்னொருத்தனும் இறங்கி வந்தான். அப்புறம் ரெண்டுபேருமா சேர்ந்துக்கிட்டு எங்க அப்பாவை சரமாரியா வெட்டினானுங்க. பக்கத்தில் எங்க டிரைவர் பன்னீர் வேடிக்கைதான் பார்த்துக்கிட்டு இருந்தார்'' என்றார் கண்ணீரோடு.

வெங்கடாசலத்தின் மகன் ராஜபாண்டியோ ""எங்க பெட்ரோல் பங்க்ல இருந்தேன். அப்ப எங்க அக்காதான் போன் பண்ணி அப்பாவை வெட்டிட்டாங்க ஓடி வான்னு கூப்பிட்டாங்க. 200 மீட்டர் தூரமுள்ள எங்க வீட்டுக்கு நான் பைக்ல புறப்பட்டப்ப... சின்னத் தக ராறுன்னு டிரைவர் பன்னீர் வந்து சொன்னான். அவன் சட்டைல ரத்தக்கறையைப் பார்த்ததும் பதட்டமாகி வீட்டுக்கு ஓடிவந்தா அப்பா தரையில் கிடக்குறார். ஓடிப்போய் காரை ஸ்டார்ட் பண்ணலாம்னு பார்த்தா சாவியைக் காணோம். அப்ப கொல்லைப் பக்கம் நின்னுக்கிட்டு இருந்த டிரைவர்.. மெதுவா வந்து சாவியைக் கொடுக்குறான். வண்டியை கிளப்புடான்னு சொன்னா... தூரத்துல கொண்டுபோய் நிறுத்தறான். அப்புறம் சத்தம் போட்டு காரைக் கிட்ட கொண்டு வரச்சொன்னேன். காரில் அப்பாவை ஏத்தினப்ப... "பதட்டபடாம ஆஸ்பத்திரிக்குப் போ'ன்னு சொன்னார். டிரைவர் இறுக்கமா உட்கார்ந்திருக்க அவனை கீழே பிடிச்சி தள்ளிட்டு.. துண்டாக்கிடந்த அப்பாவின் கையை முன்பக்கம் வச்சிக்கிட்டு புதுக்கோட்டை டீம் ஆஸ்பத்திரி நோக்கி விரைவா ஓட்டினேன். ஆலங்குடி போனப்ப... "மெதுவாப் போப்பா... கொஞ்சம் தண்ணி வேணும்'னு அப்பா கேட்க... காரை நிறுத்தினா லேட் ஆகிடும்னு... கார்ல இருந்த கொஞ்ச தண்ணீரைக் கொடுத்துட்டு ஆஸ்பத்திரிக்குப் போனேன். ஆனா காரில் இருந்து இறங்கிப் பார்த்தா அப்பா உடம்பில் உயிரில்லை. இவ்வளவு போராடியும் டிரைவர் செய்த மோசத்தால் அவரைக் காப்பாத்தமுடியாமப் போச்சுங்க. எங்க அப்பா இறந்ததை பலருக்கு போன் போட்டு டிரைவர் சொன்னான். அது கேட்டு ஆஸ்பத்திரிக்கு வந்த முசிறி ரத்தினவேல் டிரைவரின் தோளைத் தட்டிக்கொடுத்து சிரிச்சதை பார்த்தேன். யாரை நம்பு றது, யாரை நம்பக் கூடாதுன்னு தெரியலை. 16 லட்சத்திலும் பங்குகேட்டு தகராறு பண்ணிய எங்க மாமா மாசிலாமணியை இனி வீட்டுக்குள்ள விடக் கூடாதுன்னு சொன்ன அப்பா... விரைவில் சென்னையில் இருந்து ஒரு கோடி வரும். அதைவச்சி.. எல்லாப் பிரச்சினைகளையும் முடிச்சிட்டு நிம்மதியாகலாம்னு சொல்லிக் கிட்டு இருந்தார். அதுக்குள்ள இப்படி ஆயிடிச்சி'' என்றார் தாரைதாரையாக வழிந்த கண்ணீரைத் துடைத்தபடியே.

காக்கிகள் சிலரோ ""கொலையாளிகள் பயன்படுத்திய மாருதி காரை அதம்பை அருகே ரத்தக்கறையோட கண்டுபுடிச்சோம். அது பேராவூரணி கணேசனுக்கு சொந்த மானதுன்னு தெரிய வந்தது. அந்த கணேச னின் அப்பா செல்வத்துக்கும் அவன் பெரி யப்பா நீலகண்டனுக்கும் சொத்துப்பிரச்சினை இருந்திருக்கு. இதை வெங்கடாசலம் ஒரு தலைப்பட்சமாக பஞ்சாயத்து பண்ணியிருக் கார். இதைத் தட்டிக்கேட்ட கணேசனை பலர் முன்னிலையில் வெங்கடாசலம் அடிச்சிருக் கார். அதில் அவமானப்பட்டு கறுவிக்கிட்டு இருந்த இவனை வைத்தே... வெங்கடாசலத்தை ஒரு கும்பல் போட்டுத்தள்ளியிருக்கு. அந்த கணேசன் மதுக்கூர் அ.தி.மு.க. ஒ.செ.கல்யாண புரம் செந்தில் வீட்டில் பதுங்கியிருப்பதா எங்களுக்குத் தகவல் கிடைச்சிது. நாங்க போறதுக் குள்ள செந்திலும் எஸ்கேப் ஆயிட்டார். செந்தில் இப்ப மன்னார்குடி புள்ளியிடம் தஞ்ச மடைஞ்சிருப்பதா தெரியுது. மேலிட தகவலுக்குக் காத்திருக்கிறோம்'' என்றனர் நம்மிடம். டி.ஐ.ஜி.பொன்மாணிக்கவேலோ “""குற்றவாளிகளை நெருங்கிட்டோம். விரைவில் பிடிச்சிடு வோம். அவங்க பிடிபட்ட பிறகு பல திடுக் கிடும் தகவல்கள் வெளிவரலாம்'' என்கிறார் சஸ்பென்ஸ் வைத்து. இந்த நிலையில் பேராவூரணி கணேசன் 11-ந்தேதி மாலை மதுரை ஜே.எம்.-2-வது கோர்ட்டில் சரணடைந்தான்.

வெங்கடாசலம் கொலை விவகாரத்தில் பல முக்கிய புள்ளிகளின் பெயர்கள் அடிபடத் தொடங்கியிருப்பதால் மன்னார்குடிப் பக்கமும் பதட்டப் பரபரப்பு பற்றிக்கொண்டிருக்கிறது.



இந்த விசயத்தில் பத்திரிகை அதன் பங்குக்கு இரங்கி குட்டையை குழப்பி கொண்டிருக்கிறது! காரணம் வருமாறு...
*மாசிலாமணி MLAவின் மைத்துனர் மற்றும் புதுக்கோட்டையில் பல கோடி மதிப்புள்ள அனைத்து அசையா சொத்துக்களுமே மாசிலாமணி பெயரிலே உள்ளது?.அந்த வகையிலே இந்த 16லட்சத்துக்காக அவர் இந்த விசயத்தில் பிரச்சனை பண்ணி இருக்க மாட்டார் என்று மக்கள் கருதுகின்றனர்.

*மேலும் அந்த செய்தியில் குறிப்பிடப்படும் நபர்கள் கள்ளர் இனத்தை சேர்ந்த வாணக்கன்காடு கருப்பையா, தி.மு.க.பிரமுகரான கருக்காகுறிச்சி பாஞ்சாலன் ஆகியோருக்கும் முத்தரையருக்கும் இடையே விரோதத்தை வளர்க்க வேண்டும் என்றுதான் பத்திரிகை அப்படி எழுதியுள்ளது?



*மேலும் கொலைக்கு பயன்படுத்திய அரிவாளை வாணக்கன்காடு கருப்பையா-வின் தோட்டத்தில் போட்டுச்சென்றுள்ளது கொலைப்படை.



*மிக முக்கியமான விசயம் மாசிலாமணி வடகாட்டை சேர்ந்த ஒரு குழுமத்தில் முக்கியமானவர்.அடுத்த குழுமத்தில் உள்ள முக்கியமானவர் MLA.இதில் இச்செய்திமூலம் (nakkeeran) இவ்விரு குழுமத்திர்க்குள்ளும் சண்டை மூட்டிவிடும் வேலையச்செய்கிறது என்று மக்கள் கருதுகின்றனர். குழும details ..



*சசிகலா குரூப் இப்பகுதியில் நிலங்களை வாங்கி குவிப்பது உண்மைதான்..ஆனால் அனைத்து கடந்த கால வேலைகளுக்கும் MLA வே கூட நின்று ஒத்துழைப்பு செய்துள்ளார்.



*மேலும் Nakkeeranசொல்லுவது போல் பார்த்தால்!!!

சுபபாரதி கல்வி நிறுவனம் கடந்த இரண்டு ஆண்டுக்கு முன் பிரபல பெண் எம்பியிடம் விற்றுவிட்டதாகவும் இப்போது அந்நிறுவனத்தின் முன்னாள் கல்வி நிறுவனத்தின் ஓனர் தனசேகரன் என்பவர் ஒரு பினாமியாகவே செயல்படுகிறார் என்று கடந்த ஆண்டு செய்தி வந்தது.



*அந்த வகையில் தற்போது நிலமானது அந்த தனசேகரனுக்கு விற்றுவிட்டதாக சொல்லும் நக்கீரன்.மதுரையில் சரணடைந்த கணேசனுக்கும் இந்த மாசிலாமணி குரூப்பிற்கும் எந்த சம்பந்தம்?என்று விளக்கம் சொல்லவில்லை.



*மேலும் அந்த ட்ரைவர் இன்னும் போலிசு கஷ்டடியிலேதான் உள்ளான்.முசிறி ExMLAரத்தினவேலு என்பவர் முத்தரையர் இனத்தை சேர்ந்தவர்.அவர் இச்சம்பவங்களுக்கு துனைபோயிருக்கமாட்டார்.



*மேலும் இக்கொலையில் பின்னப்பட்டு திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

*இதில் ட்ரைவர் பங்கு நிச்சயம் உள்ளது ஆனால் பேராவூரணி கணேசம் கும்பலுக்கும் இந்த ட்ரைவருக்கும் மிக நீண்டகாலமாக பழக்கம் இருந்துள்ளது.

*சசிகலா குழுமத்தின் அனைத்து சகாக்களும் ஆலங்குடி பகுதியில் MLAகே பக்கபலமாக இருந்துள்ளார்கள்.மேலும் மன்னார்குடிக்கும் வடகாட்டுக்கும் பலவகைகளில் புரிந்துணர்வுகள் இருந்துவருகிறது...எகா திருமணம்



*மாசிலாமநிக்கும் MLAக்கும் சண்டை நடந்ததாக சொல்லும் நக்கீரன் இத்திட்டம் கடந்த ஒருமாதத்துக்கு முன்னதாக தீட்டப்பட்டது என்று நக்கீரனே செய்தி வெளியிட்டுள்ளது.ஆக இத்திட்டம் இவர்களுடைய சண்டைபோழுதில் அரங்கேர்ரப்பட்டுள்ளது.



*இந்நிலையில் அதிமுகவின் தலைமைச்செயலகத்திளிருந்து மிக முக்கிய செய்தி மறைந்த அமைச்சரின் வீட்டுக்கு நேரடியாகவே வந்துள்ளது..(via Phone).மேலும் அதிமுகாவின் கோட்டைமட்டும் அல்ல!! முத்தரையரின் இரும்புக்கோட்டை ஆலங்குடி தொகுதி என்பதை கடந்த ஆறு நாட்கள் ஸ்ட்ரைக் மூலம் நிரூபித்துள்ளார்கள் அப்பகுதி மக்கள்.



*போலிசு தங்களின் பார்வையில் "குற்றவாளிகளை நெருங்கிவிட்டோம்" என்று சொல்லும் இந்த நேரத்தில் நக்கீரன் தன் பங்கிற்கு விசாரணையை திசை திருப்புவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

*மொபைல் போன் வேலைசெய்யாதது குறித்து எதுவும் சொல்லவில்லை இந்த நக்கீரன்.எல்லோருக்கும் தெரியும் இந்த விசயம் ஆனால் எவனும் இந்த செய்தியை வெளியிட மாட்டேங்கிரானுக.

*வரும் 25தேதி கணேசன் எப்பிரச்சனையும் இன்றி ஆலங்குடி வந்துசேர்ந்தால்தான் கேசு தெளிவு பெரும்.





கடந்த காலங்களின் பெரும் அரசியல் அல்லக்கைகள் இப்பகுதியில் நிலங்களை வாங்கி குவித்து வருகிறது.அதுவும் லோகல் பினாமி பேரிலேயே வாங்கி வருவதும் இக்கொலையில் சில முக்கிய திருப்பங்களோடு மிக முக்கிய புள்ளிகள் அகப்படுவார்கள் என்றும் தெரிகிறது.

சில வருசத்துக்கு முன் வடகாட்டை ஒட்டிய கீளாத்தூர் என்ற இடத்தில் சுமார் 500பலாமரங்களுடன் பல வகையான மரவகைகள் கொண்ட 150-250 ஏக்கர் இடம் ஒரு முக்கிய அரசியல் பின்னணியுடன் கூடியவருக்கு கைச்சாத்திடப்பட்டது.இப்போது அந்த இடம் ஒரு சோலைபோல காட்சியளிக்கிறது.என் பார்வையில் அதன் மதிப்பு இப்போது 50கோடி? இருக்கும்.மேலும் அந்த பின்னணி தொடர்ந்து அப்பகுதிகளை வளைத்து வருகிறது.அதாவது சாதாரண ஏழைகளின் 50-100குழி இடங்களையே இவர்கள் கைப்பற்றுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக