புதன், 13 அக்டோபர், 2010

அரசு உள் ஒதுக்கீடு வழங்கிட முத்தரையர் சங்கம் தீர்மானம்

உளுந்தூர்பேட்டை : தமிழ்நாடு முத்தரையர் சங்க மாவட்ட கூட்டம் மடப்பட்டு கிராமத்தில் நடந்தது.



மாவட்ட செயலாளர் ராமானுஜம் தலைமை தாங்கினார். அரிகிருஷ் ணன் வரவேற்றார். கடலூர் மாவட்ட செயலாளர் சீத்தாபதி, அமைப்பாளர் குப்புசாமி முன்னிலை வகித்தனர். மாநில பொரு ளாளர் கோவிந்தராஜுலு, புதுச்சேரி தலைவர் குணபாலன் சிறப்புரையாற்றினர். மாவட்ட நிர்வாகிகள் துக்காராம், பழனிவேல், ராஜவேலு, ஆதிநாராயணன், ராஜேந்திரன் கலந்துக் கொண் டனர்.



முன்னாள் அமைச்சர் வெங்கடாசலம் மறைவிற்கு இரங்கல் தெரிவிக் கப்பட்டது. முத்தரையர் இன மக்களுக்கு கல்வி, வேலை வாய்ப்புகளில் 15 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கவேண்டும். அனைத்து பிரிவினரையும் எம்.பி.சி., பட்டியலில் சேர்க்க வேண்டும் உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. உளுந்தூர்பேட்டை தொகுதி பொறுப்பாளர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக