ஞாயிறு, 10 அக்டோபர், 2010

ஒரு வருத்தமான, இக்கட்டான சூழ்நிலையில் நமது சமுதாயம் இருக்கும் இந்த தருணத்தில் முத்தரையர் சமுதாயத்திற்கு என்ன ஆறுதல் கூறுவது என்று எனக்கு தெரியவில்லை, கடந்த நான்கு தினங்களாகவே என் உணர்வுகளை வெளிப் படுத்தும் வழியறியாது திகைத்து நின்றேன், ஒரு வழியாக என்னை நானே சமாதனப் படுத்திக்கொண்டு இந்த பதிவினை எழுதுகிறேன்,
என்ன நடந்தது?
இதில் யாருக்கெல்லாம் பங்கு?
முத்தரையர்கள் மட்டுமே வாழும் வடகாட்டில் இது எப்படி சாத்தியம்?
யாரெல்லாம் உடந்தை?
இந்த கேள்விக்கெல்லாம் விடை யாரிடம் உண்டு? தமிழக அரசை, தமிழக காவல்துறையை இந்த விசயத்தில் எத்தனை தூரம் நாம் நம்புவது?
ஓன்று மட்டும் உறுதி எதோ பெரிய சதி நடந்திருக்கிறது.
விடை கிடைக்கும் பொழுது.....! என்னால் கூற முடியவில்லை...!!!!
இந்த தருணத்தில் எமது இனத்தின் இதர தலைவர்கள் அனைவரையும் வேண்டி கேட்டுக் கொள்கிறேன், தயவு செய்து உங்களின் பாதுகாப்பினை உறுதி செய்துகொள்ளுங்கள், இது போன்ற இன்னொரு இழப்பினை தாங்கும் நிலையில் நமது சமுதாயம் இல்லை, இந்த இழப்பினை சரிசெய்ய யாராலும் முடியாது, இன்று முத்தரையர் சமுதாயதிற்கு ஒரு மரியாதை உண்டு என்றால் அதில் மிகப் பெரிய பங்கு திரு. ஆலங்குடி வெங்கடாசலம் அவர்களுக்கானது,
மனது முழுவதும் வெறுமையாய் இருக்கிறது,
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்

சஞ்சய்காந்தி

1 கருத்து: