மன்னார்குடி, அக்.12-
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகேயுள்ள ராதா நரசிம்மன்புரத்தை சேர்ந்தவர் விஜயன். இவர் தனது தாய் மலர்கொடியை, ஆஸ்பத்திரிக்கு, மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார்.
அப்போது அங்குள்ள மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு அலுவலகம் அருகே வந்து போது புகழேந்தி என்பவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதனால் ஆத்திரமடைந்த புகழேந்தி, விஜயனையும், தாய் மலர் கொடியையும் தாக்கினார். புகழேந்தி, முத்தரையர் சங்க இளைஞரணி செயலாளராக உள்ளார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து விஜயனின் ஆதரவாளர்கள், 50 பேர் திரண்டு வந்து, புகழேந்தியின் வீட்டை அடித்து நொறுக்கினார்கள். மேலும் அருகில் உள்ள மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு அலுவலகத்துக்கு தீவைத்தனர். புகழேந்தியின் அண்ணன் குழுமணியின் நினைவு மணி மண்டபத்தையும் உடைத்தனர்.
இதைத் தொடர்ந்து புகழேந்தியின் ஆதரவாளர்கள் தென்பரையில் உள்ள விஜயனின் மளிகை கடையை அடித்து நொறுக்கி சூறையாடினார்கள். இந்த மோதல் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் குவிக்கப் பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து திருமக்கோட்டை போலீசில் விஜயன், புகழேந்தி ஆகியோர் தனிதனியே புகார் செய்தனர்.
அதன்பேரில் போலீசார், இருதரப்பையும் சேர்ந்த மகேந்திரன்(23), பரணிதரன்(22), வடிவேலு(36), ரவிச்சந்திரன்(39), விஜயன்(17), பிரகாஷ்(27), குருமூர்த்தி (24), ராதாகிருஷ்ணன் (50), ஆகிய 8 பேரை கைது செய்தனர்.
இந்நிலையில், விஜயனின் உறவினர் அன்பரசனின், பம்புசெட் கொட்டைகைக்கு இன்று அதிகாலை, மர்ம கும்பல் தீவைத்து விட்டு சென்று விட்டனர். இதனால் 2-வது நாளாக அப்பகுதியில் வன்முறை தொடர்ந்து நீடித்து வருகிறது இதையொட்டி மாவட்ட, போலீஸ் சூப்பிரண்டு மூர்த்தி தலைமையில், போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர். மேலும் தொடர்ந்து மோதல் ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக