புதன், 13 அக்டோபர், 2010

சாதி வாரி கணக்கெடுப்புக்கு வலியுறுத்தி கருணாநிதியுடன் ராமதாஸ் சந்திப்பு

சென்னை, அக். 13-

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று காலை 11 மணிக்கு சென்னை கோட்டைக்கு வந்தார்.

முதல்- அமைச்சர் கருணாநிதியை அவர் சந்தித்து பேசினார். அவருடன் 27 சமுதாய அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் வந்திருந்தனர்.

தமிழ்நாட்டில் உடனடி யாக சாதி வாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று வற்புறுத்தும் மனுவை முதல்- அமைச்சரிடம் கொடுத்தனர்.

டாக்டர் ராமதாஸ் அந்த மனு குறித்து முதல்- அமைச்சர் கருணாநிதியிடம் விளக்கினார். முதல்- அமைச்சரும், சில கருத்துக்களை தெரிவித்தார். இந்த சந்திப்பு அரைமணி நேரம் நடந்தது.

பின்னர் டாக்டர் ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதா வது:-

முதல்- அமைச்சர் கருணாநிதியை நானும், 27 சமுதாய அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் இன்று சந்தித்தோம். இந்த சந்திப்பு மகிழ்ச்சிகரமாக இருந்தது. சாதி வாரி கணக் கெடுப்பை உடனே நடத்த வேண்டும் என்று வற்புறுத் தும் மனுவையும் அவரிடம் கொடுத்தோம்.

எத்தனை நாளில் எந்த நேரத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று அதில் கூறி இருக்கிறோம். முதல்- அமைச்சரிடமும் அதுபற்றி விளக்கி கூறினோம்.

அதற்கு பதில் அளித்த முதல்- அமைச்சர் கருணாநிதி நான் சாதிவாரி கணக்கெடுப்பை எதிர்க்கவில்லை. அதை வற்புறுத்திதான் வருகிறேன். தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆணையத்தின் தலைவர் நீதிபதி ஜனார்த்தனத்துடன் கலந்து பேசி நல்ல முடிவு எடுக்கப்படும் என்று உறுதி கூறி இருக்கிறார். இது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

சாதி வாரி கணக்கெடுப்பு 2011 பிப்ரவரிக்குள் நடத்தப்பட்டால்தான் பயனுள்ள தாக இருக்கும். ஜூன் மாதத்தில் மத்திய அரசு தனி அமைப்பை வைத்து சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதாக அறிவித்துள்ளது. இதனால் எந்த பயனும் கிடைக்காது. கணக்கெடுப்பை பாதியில் கூட நிறுத்தி விடுவார்கள்.

தமிழக அரசு அறிவித்துள்ள 69 சதவீத இட ஒதுக் கீட்டின்பயன் பிற்பட்டோர், தாழ்த்தப்பட்டோருக்கு கிடைக்க வேண்டும் என்றால் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய மாதங்களில் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று முதல்வரை வற் புறுத்தி இருக்கிறோம். அவர் நல்ல முடிவு எடுப்பார் என்று நம்புகிறோம்.

கேள்வி:- தி.மு.க.வும், பா.ம.க.வும் மீண்டும் கூட்டணி அமைக்கும் என்று ஊடகங்களில் செய்தி வருகிறதே? இன்று அது குறித்து பேசினீர்களா?

பதில்:- ஊடகங்களில் தான் அப்படி கூறுகிறார்கள். இன்றைய சந்திப்பின்போது அதுபற்றி பேசவில்லை. இன்றைய சந்திப்பு அதற் கானது அல்ல. இன்று பல் வேறு சமுதாய அமைப்பு பிரதிநிதிகளுடன் முதல் வரை சந்தித்தேன்.

கேள்வி:- கூட்டணி தொடர்பாக பேசுவதற்கு மீண்டும் முதல்- அமைச்சரை சந்திப்பீர்களா?

பதில்:- அரசியலில் எதுவும் நடக்கலாம். இப்போது அதுபற்றிய கேள்வியே எழவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

டாக்டர் ராமதாசுடன் ஜி.கே. மணி (பா.மக.), கரிக்கோல்ராஜ் (தமிழ் நாடு நாடார் பேரவை பொதுச் செயலாளர்), சேலம் செல்லப்பன் (தமிழ் நாடு நாடார் பேரவை பொருளாளர்), ராமகிருஷ்ணன் (தேவர் பேரவை), கோபா லகிருஷ்ணன், (தமிழ்நாடு யாதவ மகாசபை), ராஜ மாணிக்கம் (தமிழ்நாடு முத்தரையர் சங்கம்), அனந்தராமன் (நாயுடு மக்கள் சக்தி இயக்கம்), நாகராஜன், (தொட்டிய நாயக்கர் சங்கம்), முகமது ஜமாலி (சுன்னத் ஐக்கிய ஜமாத்), சாமுவேல் (இந்திய சுவிசேஷ லுத்தி ரன் சபை), அதியமான் (அருந்ததியர் ஆதிதமிழர் பேரவை) உள்பட 27 அமைப்புகளின் பிரதிநிதிகள் சென்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக