சனி, 9 அக்டோபர், 2010

ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி வடகாடு கல்லறை தோட்டத்தில் வெங்கடாசலம் உடல் அடக்கம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வெங்கடாசலம் உடலுக்கு அரசியல்கட்சி பிரமுகர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அடுத்த வடகாட்டில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வெங்கடாசலம் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவரது உடல் புதுக்கோட்டை அரசு தலைமை மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நேற்று பகல் 12.50 மணிக்கு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.



மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸ் வேன் மூலம் அவரது உடல் வடகாட்டுக்கு ஊர்வலமாக எடுத்துசெல்லப்பட்டது. வழி நெடுகிலும் ஏராளமானோர் திரண்டு நின்று அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். மாலை ஆறு மணிக்கு அவரது உடல் வடகாட்டில் உள்ள அவரது வீட்டின் முன் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.அ.தி.மு.க., மகளிர் அணி செயலாளர் கோகுல இந்திரா, விவசாய அணி செயலாளர் துரை கோவிந்தராஜன், எம்.பி., குமார், டாக்டர் வெங்கடேஷ், தினகரன், முத்தரையர் சங்க நிர்வாகிகள் விஷ்வநாதன், செல்லையா உட்பட அரசியல் கட்சி பிரமுகர்கள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் ஆயிரக்கணக்கானோர் அவரது உடல்மீது மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மாலை 7.30 மணிக்கு அவரது உடல் வீட்டின் அருகில் உள்ள கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.இறுதி ஊர்வலத்தைத் தொடர்ந்து வடகாடு மற்றும் ஆலங்குடியில் 2,000க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்


Ramasamy - Dubai,ஐக்கிய அரபு நாடுகள் 2010-10-09 11:16:12 IST
One of the best political leader for the four peoples in Pudukottai District. My condolence to their family and muthiriyar society...

பா.சிதம்பரம் - dubai,ஐக்கிய அரபு நாடுகள் 2010-10-09 11:03:38 IST
காவல்துறை கொலைகாரர்களை கைது செய்தார்களா இல்லை வழக்கம் போல் உண்மை குற்றவாளிகளை தப்பிகவிட்டு கைது செய்வது போல் நாடகம் அடுகிரர்களா? ஒரு வெங்கடாசலம் மறைந்தால் என்ன அதே மண்ணில் இன்னும் பல வெங்கடாசலம் தோன்றுவார்கள் என்று நம்புகிறான். அன்னாரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தர்ருகும் சமுதாய மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்...

nalavan - uk,இந்தியா 2010-10-09 09:31:04 IST
நன்றி ,புதுக்கோட்டை மாவட்ட காவல்துறைக்கு எப்படி எச்சரிகை கொடுக்க போறிங்க ,மக்களுக்கு பயன்படாத மாவட்ட காவல் துறை லஞ்ச துறை...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக