செவ்வாய், 2 நவம்பர், 2010

ஆலங்குடி பகுதியில் களையிழந்த தீபாவளி - தினமணி

ஆலங்குடி, நவ. 1: ஆலங்குடி பகுதிகளில் அண்மையில் நிகழ்ந்த படுகொலைச் சம்பவங்களால் இப்பகுதிகளில் தீபாவளிப் பண்டிகைக் கொண்டாட்டம் களையிழந்து காணப்படுகிறது.

இடைவிடாது அதிரும் வெடியோசை, குடும்பத்தோடு கையில் கனமான பைகளுடன் வீதிகளில் மக்கள் நடமாட்டம், பேருந்துகளில் நெரிசல், கடைகளில் குவியும் மக்கள் - இத்தகைய காட்சிகளைக் கொண்டே தீபாவளிக் கொண்டாட்டம் தொடங்கிவிட்டது எனத் தெரிந்து கொள்ளலாம்.

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம், வடகாட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர் அ. வெங்கடாசலம் அக். 7-ம் தேதி அவரது வீட்டில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

இதேபோல, ஆலங்குடி நகர திமுக செயலர் படுகொலைச் சம்பவமும் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஆண்டுதோறும் தீபாவளிக்கு ஒரு மாதத்துக்கு முன்னதாகவே ஆலங்குடி கடைவீதியில் ஒலிபெருக்கி வணிக விளம்பரமும் நிறுத்தப்பட்டுள்ளது. பட்டாசுக் கடைகள் அமைக்கப்படவே இல்லை.

வடகாடு பகுதியின் கடைவீதி எந்நேரமும் வெறிச்சோடியே காணப்படுகிறது.

இதுகுறித்து ஜவுளிக் கடையின் உரிமையாளர் வடகாடு அ. பார்த்திபன் கூறியது:

இந்தப் பகுதிகளில் உள்ள மக்கள் காலை, மாலை வேளைகளில்தான் கடைக்கு வருவர்.

படுகொலைகள் எதிரொலியாக நிகழாண்டு, ஜவுளி விற்பனையில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றார் அவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக