சனி, 20 நவம்பர், 2010

முன்னாள் அமைச்சர் வெங்கடாசலம் கொலை சம்பத்தில் காவல்துறை நடவடிக்கை கோரி உண்ணாவிரதம் - நக்கீரன்

புதுக்கோட்டையில் முன்னாள் அமைச்சர் வெங்கடாசலம் கொலை சம்மந்தமாக காவல்துறை நடவடிக்கை கோரி உண்ணாவிரதம் நடைபெற்றது.



கடந்த மாதம் 7ஆம் தேதி அதிமுக முன்னாள் அமைச்சர் வெங்கடாசலம், வடகாடு கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.



இந்நிலையில் உண்மையான குற்றவாளிகள் மறைக்கப்படுவதாகவும், கொலை சம்மந்தமாக காவல்துறை நடவடிக்கை எடுக்கக்கோரியும் வெங்கடாசலத்தின் ஆதரவாளர்கள், முத்தரையர் சங்க பிரதிநிதிகள் மற்றும் அனைத்துக் கட்சிகள் சார்பில் புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே உண்ணாவிரதம் நடைபெற்றது.



முத்தரையர் சங்க தலைவர் செல்லையா தலைமையிலும், முத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் விஸ்நாதன் முன்னிலையிலும் இந்த உண்ணாவிரதம் நடைபெற்றது. இதில் சுமார் 5 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.



புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, சிவகங்கை மற்றும் பல பகுதிகளில் இருந்து முத்தரையர் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். புதுக்கோட்டை நகரத்தில் பல சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக