வியாழன், 18 நவம்பர், 2010

உண்மை குற்றவாளி கண்டுபிடிக்க கோரி ஆர்ப்பாட்டம் - தினமலர்

ஆலங்குடி: பேராவூரணி தொகுதி முன்னாள் எம்.எல். ஏ., செல்லையா வெளியிட்ட அறிக்கை : மாஜி அமைச்சர் வெங்கடாசலம் அவரது வீட்டில் மர்ம நபர்கள் வெட்டிக்கொலை செய்ததை கண்டித்தும் உண்மை குற்றவாளியை கண்டுபிடிக்க போலீஸ் துறைக்கு கோரிக்கை வைத்தும், புதுக்கோட்டை, தஞ்சை, சிவகங்கை மாவட்டங்களில் அதன் தொடர்பாக அப்பாவிகள் மீது போடப்பட்ட வழக்குகளை அரசு திரும்ப பெற வேண்டும். அதை வலியுறுத்தி நவம்பர் 20ம் தேதி புதுக்கோட்டை பழைய பஸ் ஸ்டாண்டில் அடையாள உண்ணாவிரத போராட்டம் மாபெரும் அளவில் நடத்தப்படும்.இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக