சனி, 25 டிசம்பர், 2010

இன்று குதிரை வாகனத்தில் ஸ்ரீரெங்கநாதர் சேவை சாதிப்பு- தினமலர்

ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் கோவிலில் குதிரை வாகனத்தில் ஸ்ரீரெங்கநாதர் இன்று தோன்றி பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார்.



ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த ஆறாம் தேதி திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. பகல்பத்து, ராப்பத்து இயற்பா என 21 நாட்கள் நடக்கும் இந்த விழாவில் கடந்த 17ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சொர்க்கவாசலை தரிசித்தனர்.



தற்போது, ராப்பத்து விழா நடந்து வருகின்றது. விழாவின், எட்டாம் நாள் விழாவான வேடுபறி நிகழ்ச்சி இன்று நடக்கிறது. ஸ்ரீரெங்கநாதர் குதிரை வாகனத்தில் மாலை 4.30 மணிக்கு சந்தன மண்டபத்தில் இருந்து புறப்படுகின்றார். மாலை 5.30 மணிக்கு ஆயிரங்கால் மண்டபம் மணல் வெளியில் வையாளி கண்டருள்கிறார்.



முத்தரையர் குல மரபில் வந்தவரும் ஆழ்வார்களில ஒருவருமான திருமங்கை ஆழ்வார் கோவில் திருப்பணி செய்வதற்காக வழிபறியில் ஈடுபட்டு வந்தான். இதை தவறு என்று உணர வைக்க மகாவிஷ்ணு திருமங்கை முன் தோன்றி ஞானம் பெற்ற நிகழ்ச்சியும் ஆழ்வார்களில் ஒருவராக ஏற்றுக்கொள்ளப்பட்ட நிகழ்ச்சியும் நடக்கிறது.

பதிவு செய்த நாள் : டிசம்பர் 24,2010,03:00 IST


இதைத்தொடர்ந்து இரவு 7 மணிக்கு ஸ்ரீரெங்கநாதர், திருமாமணி மண்டபத்தில் எழுந்தருள்கிறார். அலங்காரம் அமுது செய்யதிரையும், அரையர் சேவையும் நடந்தது. உபயக்கார மரியாதைக்கு பிறகு திருமாமணி மண்டபத்தில் இருந்து புறப்பட்டு வீணை வாத்தியங்கள் முழங்க அதிகாலை 12.15 மணிக்கு மூலஸ்தானம் அடைகிறார்.



ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஜெயராமன் அறங்காவலர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக