திங்கள், 31 ஜனவரி, 2011

தமிழ்நாடு முத்தரையர் சங்க மாநில திட்டமிடல் செயற்குழு கூட்டம் - தினமலர்

பதிவு செய்த நாள் : ஜனவரி 31,2011,23:54 IST


திருச்சி: தமிழ்நாடு முத்தரையர் சங்கத்தின் மாநில திட்டமிடல் செயற்குழுக்கூட்டம் திருச்சியில் நடந்தது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: முத்தரையர்களுக்கு அனைத்து துறைகளிலும் 15 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை கேட்டுக் கொள்கிறோம். வரும் சட்டசபைத் தேர்தலில் முத்தரையர் தனிப் பெரும்பான்மையுடன் வசிக்கும் 25 தொகுதிகளில் முத்தரையர் அரசியல் பிரமுகர்கள் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சிகளையும் கேட்டுக் கொள்கிறோம். நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலில் போட்டியிட முத்தரையர்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை என்றால், பெரும்பான்மை முத்தரையர் வாக்காளர் உள்ள தொகுதிகளில் தமிழ்நாடு முத்தரையர் சங்கம் சார்பில் வேட்பாளர்களை நிறுத்துவது என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்க பொதுச்செயலாளர் பாஸ்கரன், அமைப்பு செயலாளர் காடகர், மீனவரணி செயலாளர் கருப்பையா, திருச்சி மாவட்ட செயலாளர் தங்கவேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக