திருச்சி, பிப். 13-
திருச்சி-சென்னை 4 வழிச்சாலையில் அயன் பேரையூர் கைகாட்டி அருகே அமைக்கப்பட்டுள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தமிழக துணை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின், பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று இரவு விமானம் மூலம் திருச்சிக்கு வந்தார். அங்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் அமைச்சர் செல்வராஜ், எம்.எல்.ஏ.க்கள் அன்பில் பெரியசாமி, கே.என்.சேகரன், ராணி, சவுந்தர்ராஜன், துணை மேயர் அன்பழகன், மாவட்ட துணை செயலாளர்கள் குடமுருட்டி சேகர், அம்பிகாபதி, மாவட்ட ஊராட்சி தலைவர் சங்கீதா, மல்லியம்பத்து, ஊராட்சி தலைவர் கதிர்வேல், தொழில் அதிபர் ஜான்சன்குமார், மோகன்தாஸ் உள்படபலர் கலந்து கொண்டனர்.
பின்னர் இரவு திருச்சி சுற்றுலா மாளிகையில் மு.க.ஸ்டாலின் தங்கி ஓய்வு எடுத்தார். இன்று காலை பெரம்பலூருக்கு காரில் புறப்பட்டு சென்றார். இதைத்தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட எல்லையான பாடலூர் வந்த போது மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் பெரம்பலூர் துறைமங்கலத்தில் நடேசன் வளாகத்தில் அமைக்கப் பட்டுள்ள கலைஞர் அரங்கத்தில் அமைச்சர் செல்வராஜின் சகோதரர் துரை ராஜ்-செல்லம்மாள் மகன் ராஜ்மோகன், தமிழ்நாடு முத்தரையர் சங்க முன்னாள் தலைவர் முள்ளிக்கரும்பூர் ராஜமாணிக்கம் பேத்தி தங்கமணி ஆகியோர் திருமணத்தை மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி பேசினார்.
விழாவில் அமைச்சர்கே.என்.நேரு, மத்திய மந்திரி நெப்போலியன், மாவட்ட செயலாளர்கள் பெரம்பலூர் துரைசாமி, அரியலூர் சிவசங்கர், ராஜ்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து பெரம்பலூர் உழவர்சந்தை திடலில் மாவட்ட செயலாளர் துரைசாமி-மாவட்ட ஊராட்சி தலைவர் கொடியரசி துரைசாமி ஆகியோர் மகள் தமிழ் பொன்னி, காஞ்சிபுரம் ஆசூர் பி.எஸ்.என்.எல். அதிகாரி அப்பாவு- ஹில்டாமேட்லின் மகன் விமல் கிறிஸ்டோபர் ஆகியோரது திருமணத்தை மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்தார்.
பின்னர் காலை 11 மணிக்கு திருச்சி-சென்னை 4 வழிச்சாலையில் அயன் பேரையூர் கைகாட்டி அருகே அமைக்கப்பட்டுள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். விழாவில் கலைஞர் வீடு வழங்கும் திட்ட பயனாளிகளுக்கு வீட்டை வழங்கியும், அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். விழாவுக்கு மாவட்ட கலெக்டர் விஜயகுமார் தலைமை தாங்கினார். விழாவில் மத்திய மந்திரி நெப்போலியன், திருமாவளவன் எம்.பி., ராஜ்குமார் எம்.எல்.ஏ., மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகேஸ்வரி, மாவட்ட ஊராட்சி தலைவர் கொடியரசி துரைசாமி, மாவட்ட வருவாய் அதிகாரி நடராஜன், வேப்பந்தட்டை ஒன்றியக்குழு தலைவர் மகாதேவி ஜெயபால், அயன் பேரையூர் ஊராட்சி தலைவர் லட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து மு.க.ஸ்டாலின் கடலூருக்கு புறப்பட்டு சென்றார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக