சட்டமன்ற தேர்தல் 2011 - இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கத்தின் நிலைப்பாடு
நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் இளம் சிங்கங்களுக்கும் இனிய வணக்கங்கள்,
வருகின்ற சட்டமன்ற தேர்தல் 2011 , முத்தரையர் சமுதாயதினைப் பொறுத்தவரை மிக முக்கியமானது ஆம், கடந்த சில வருடங்களாகவே நம்மை திட்டமிட்டு புறக்கணிப்பதும், பலி வாங்குவதும் நடந்து கொண்டிருக்கும் இந்த நிலையில் வரும் தேர்தல் நமக்கு மிக முக்கியமானதுதான், முதலில் ராமநாதபுரம் மாவட்டம் ஏற்காட்டில் பெரும்பிடுகு முத்தரையர் சிலை வைத்தபோது அரச இயந்திரங்கள் துரித கதியில் அத்தனை அப்புறப்படுத்தியது இதுவரை அதனை திரும்பி அமைத்து தரவில்லை ,மதுரை மாவட்டம் எலியார் பத்தியில் எமது சமுதாய முன்னோடியின் பெயர் பலகை மீது செருப்பு அணிவித்து எங்களை அவமான படுத்தியவர்களை திருப்பதிபடுத்த எமது மக்கள் மீது காவல்துறை அராசகம் கட்டவிழ்த்து விடப்பட்டது, திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே எமது சமுதாய கொடியினை அவமான படுத்தியவர்களை விட்டுவிட்டு எமது சமுதாயத்தவர்கள் மீது பொய் வழக்குகள் போட்டு தமது கூட்டணி கட்சியினை திருப்தி படுத்த நினைக்கிறது திராவிட முன்னேற்ற கழகம், சரி அவர்கள் தான் அப்படி என்றால் தமது கட்சியில் மாநில பொறுப்பில் உள்ள ஒரு முன்னாள் அமைச்சரை அவரது வீட்டிலேயே ஒரு அராசக கும்பல் வெட்டிக்கொல்கிறது அவரது இறுதி சடங்கில் கூட கலந்துக் கொள்ளவில்லை அண்ணா திராவிட முன்னேற்ற கழக தலைமை ஆக தமிழக அரசியலில் மிக பெரிய சக்திகள் இரண்டும் நம்மை கண்டு கொள்ளாத நிலையில் பிற கட்சிகளின் நிலையினை கூறவே வேண்டாம். இதற்கிடையில் நமது சமுதயாதிக்கென்றே கடந்த தேர்தல் வரை கு.ப. கிருஷ்ணன் நடத்திய "தமிழர் பூமி" யும் தன்னை வேறு கட்சிகளுடன் இணைத்துக்கொண்டு விட்டது, இந்த தேர்தல் நேரத்தில் நமது சமுதாயதிற்காக புதிய அரசியல் கட்சிகளாக முத்தரையர் மக்கள் கட்சி, சிங்க தமிழர் முன்னேற்ற கழகம் போன்றவை தொடங்கப்பட்டுள்ளது, இவர்களின் நிலைப்பாடும் மிக சிக்கிரமே நமக்கு தெரிந்து விடும் அரசியல் இயக்கங்கள் நீண்ட காலமாக நம்மை ஏமாற்றி வரும் சூழ்நிலையில் மிக குறுகிய காலத்தில் நாம் தமிழக சட்டமன்ற தேர்தலினை எதிர்கொள்ள உள்ள இந்த நேரத்தில் இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம் எந்த அரசியல் இயக்கத்தினையும், எந்த கூட்டணியையும் ஆதரிக்கவில்லை, சந்தர்ப்பவாத அரசியல் நடத்தும் அரசியல் இயக்கங்கள், அரசியல் கோமாளித்தனங்களை கண்டு நாம் உண்மையில் வெறுத்துபோய் உள்ளோம் என்பதுதான் உண்மை, சரி அப்படியானால் நாம் யாரை இந்த தேர்தலில் ஆதரிப்பது ?
இந்த சட்டமன்ற தேர்தலில் நேரிடையாக நாம் அரசியல் இயக்கங்களை ஆதரிக்காத நிலையில் நமது சமுதாயதிற்காக என்று தொடங்கப் பட்டுள்ள அரசியல் இயக்கங்களை (முத்தரையர் மக்கள் கட்சி, சிங்க தமிழர் முன்னேற்ற கழகம்)ஆதரிக்கலாமா?
என்றால் அவர்களின் அரசியல் நிலைப்பாடு சரியானதாக இருக்கும் பட்சத்தில் அவர்களை ஆதரிப்போம், இல்லாத பட்சத்தில் எமது சமுதாய மக்கள் பெரும்பான்மையாக வாழும் தொகுதிகளில் எமது சமுதாயதவர்களுக்கு முன்னுரிமை அளித்து வேட்பாளராக அறிவிக்கும் அரசியல் இயக்கங்களை வேறு எந்த நிபந்தனையும் இன்றி ஆதரிப்போம் என்பது தான் இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம் இந்த தேர்தலில் நிலைப்பாடு
அடுத்ததாக அனைத்து கட்சிகளின் சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப் படும் முத்தரையர் சகோதரர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள், உங்களை வேட்பாளர்களாக அறிவித்து இருக்கின்றார்கள் என்றால் அது உங்களின் தனிப்பட்ட அரசியல் செல்வாக்கால் அல்ல, தனிப்பட்ட செல்வாக்கால் 9 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த மறைந்த பெரும் தலைவர் நத்தம் ஆண்டி அம்பலத்திற்கு மட்டுமே அத்தகைய செல்வாக்கு உண்டு, உங்களுக்கு தரப்படும் சீட்டு என்பது உங்களின் சமுதாய பின்னணியை அடிப்படையாக கொண்டது மட்டுமே இத்தனை மனதில் நிறுத்தி உங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் இந்த சமுதாயத்திற்கு செய்ய வேண்டும் என்பது இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கத்தின் அன்பான வேண்டுகோள் !!
எமது சமுதாய மக்கள் அரசியல் விழிப்புணர்வு உள்ளவர்கள் ஆனால் சரியான நேரத்தில் சரியான முடிவினை எடுக்காதவர்கள் இந்த தேர்தலிலாவது அந்த நிலை மாறி சரியான முடிவினை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு என்று உறுதியாக நம்புகிறோம்
நன்றி
சஞ்சய்காந்தி அம்பலக்காரர்
ஒருங்கிணைப்பாளர்
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக