சனி, 12 மார்ச், 2011

3 தொகுதிகளில் முத்தரையர் சங்க நிர்வாகிகள் போட்டி - Thanks to Dinamani

ராமநாதபுரம், மார்ச் 11: ராமநாதபுரம் மாவட்டத்தில் முத்தரையர் சங்க நிர்வாகிகள் 3 தொகுதிகளில் (ராமநாதபுரம், திருவாடானை, முதுகுளத்தூர்) போட்டியிட இருப்பதாக அதன் மாவட்டத் தலைவர் எம்.குப்புச்சாமி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
ராமநாதபுரத்தில் இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: தமிழகத்தில் திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை உசக்பட 70 தொகுதிகளில் முத்தரையர் சமுதாய மக்கள் சுமார் ஒரு கோடி பேர் வரை இருந்தும் எந்தக் கட்சியும் கண்டுகொள்ளவில்லை.
எனவே முத்தரையர் மக்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் மட்டும் வேட்பாளர்களை நிறுத்திட முடிவு செய்திருக்கிறோம். சிங்கத்தமிழர் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் தனித்து நின்று போட்டியிடுகிறோம்.
ராமநாதபுரம் தொகுதியில் 62000பேரும், பரமக்குடியில் 38000 பேரும்,முதுகுளத்தூரில் 35000 பேரும் முத்தரையர்கள் இருக்கின்றனர். பரமக்குடி தனித்தொகுதியில் மட்டும் சுமார் 25000 பேர் உள்ளனர்.
தனித்தொகுதியாக பரமக்குடி இருப்பதால் அதைத் தவிர மற்ற 3 தொகுதிகளில் சங்க நிர்வாகிகள் வேட்பாளர்களாகட்க் போட்டியிடுகின்றனர்.
ராமநாதபுரம் தொகுதியில் எம்.குப்புச்சாமி ஆகிய நானும், திருவாடானை தொகுதியில் ராமநாதபுரம் அருகேயுள்ள தெற்குத்தரவை ஊராட்சி மன்றத் தலைவரும், சங்கத்தின் துணைத் தலைவருமான வி.கோவிந்தனும், ராமநாதபுரம் நகர்த் தலைவர் ஆர்.பி.செந்தில்குமார் முதுகுளத்தூர் தொகுதியிலும் போட்டியிடுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக