வியாழன், 3 மார்ச், 2011

முத்தரையர் மீதான வழக்குகளை வாபஸ் பெற வலியுறுத்தல் - தினமணி

First Published : 27 Feb 2011 11:48:08 AM IST
மதுரை, பிப். 26: திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வட்டம், பரளிப்புதூரில் அப்பாவி முத்தரையர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்று தமிழ்நாடு முத்தரையர் சங்கத்தின் மதுரை மாவட்டத் தலைவர் வி.ராஜாராம்பாண்டியன் அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாடு முத்தரையர் சங்கத்தின் மாநில மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம், தேர்தல் ஆலோசனைக் கூட்டம் அண்மையில் மதுரையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் முத்தரையர் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளில் அவர்களை வேட்பாளர்களாக நிறுத்த வேண்டும். முத்தரையர் சமுதாயத்துக்கு 10 சதவிகித உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வட்டம் பரளிப்புதூரில் அப்பாவி முத்தரையர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை அரசு வாபஸ் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தேர்வாணைக் குழு உறுப்பினர் பதவிக்கு முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த டாக்டர் பன்னீர் செல்வத்தை தேர்ந்தெடுத்தமைக்காக முதல்வருக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக