ஞாயிறு, 3 ஏப்ரல், 2011

தொகுதி விவரம்: திருமயம்

திருமயம் 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றாகும். தமிழகத்தில் தலை சிறந்த ஆன்மிக திருத்தலங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. அனைத்து மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் தொகுதி ஆகும். இதுவரை நடைபெற்ற திருமயம் தொகுதியில் 12 சட்டமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் 6 முறையும், தி.மு.க. 3 முறையும், அ.தி.மு.க. 2 முறையும் வெற்றி பெற்றுள்ளது. இத்தொகுதியில் கள்ளர் இன மக்கள் அதிகமாக வசித்து வருகிறார்கள். இதையடுத்து முத்தரையர், ஆதிதிராவிடர், நகரத்தார் இன மக்கள் அதிகமாக வசித்து வருகிறார்கள். மேலும் பல்வேறு இன மக்கள் குறிப்பிடத்தக்க வகையில் வசித்து வருகிறார்கள். திருமயம் சட்டமன்ற தொகுதி சிவங்கை பாராளுமன்ற தொகுதியோடு சேர்ந்தது. திருமயம் தொகுதியில் 2 தாலுகாக்கள், 3 ஒன்றியங்கள், 2 பேரூராட்சிகள் உள் ளன. இதில் பொன்னமராவதி ஒன்றியத்தில் 42 ஊராட்சிகளும், பேரூராட்சி ஒன்றும் இருக்கின்றன. அரிமளம் ஒன்றியத்தில் 27 ஊராட்சிகளும், பேரூராட்சி ஒன்றும் உள்ளன. திருமயம் ஒன்றியத்தில் 33 ஊராட்சிகள் உள்ளன. திருமயம் ஒன்றியம் அரசம்பட்டி, ஆதனூர், இளஞ்சாவூர், கோனாபட்டு, குலமங்களம், குருவிக்கொண்டான்பட்டி, லெம்பலக்குடி, மேலூர், நற்சாந்துப்பட்டி, நெய்வாசல், அழகாபுரி, புலிவலம், ராங்கியம், சேதுராபட்டி, துளையானூர், வெங்கலூர், விராச்சிலை, அரங்கினாம்பட்டி, ஆத்தூர், கண்ணனூர், கோட்டைïர், குழிபிறை, கோட்டூர், மேலப்பனைïர், மிதலைப்பட்டி, நெய்கோணம், காட்டுபாவா பள்ளிவாசல், பனையப்பட்டி, பேரைïர், திருமயம், ராராபுரம், ஊனைïர், வி.லெட்சுமிபுரம். அரிமளம் ஒன்றியம் ஏம்பல், இரும்பாநாடு, குருங்களூர், காரமங்கலம், புதுநிலைவயல், நெடுங்குடி, நல்லம்மாள்சமுத்திரம், ராயவரம், செங்கீரை, தேக்காட்டூர், கே.செட்டிப்பட்டி, முனசந்தை, மிரட்டுநிலை, சமுத்திரம், ஓணாங்குடி, துறைïர், மதகம், கல்லுக்குலையான்வயல், திருவாக்குடி, வாளரமாணிக்கம், கே.ராயவரம், கல்லூர், பிலியாவயல், கடியாப்பட்டி, ஆயிங்குடி, பெருங்குடி, கண்ணங்காரக்குடி, கடையக்குடி, வன்னியம்பட்டி, கும்பங்குடி, கீழப்பனைïர், மேல்நிலைவயல். பொன்னமராவதி ஒன்றியம் அம்மன்குறிச்சி, அரசமலை, ஆலம்பட்டி, ஆலவயல், பகபாண்டிபட்டி, இடையாத்தூர், கல்லம்பட்டி, கண்டியாநத்தம், ஏனாதி, கூடலூர், காரைïர், காட்டுப்பட்டி, அம்மாசமுத்திரம், கொன்னயம்பட்டி, கோவலூர், சுந்தரசோழபுரம், கொப்பனாபட்டி, கொன்னைப்பட்டி, செம்பூதி, செவலூர், சேரலூர், திருக்களம்பூர், தொட்டியம்பட்டி, பி.உசிலம்பட்டி, தூத்தூர், தேனூர், மரவாமதுரை, மேலமேல்நிலை, மேலைச்சிவபுரி, மேலத்தானியம், நல்லூர், நெறிஞ்சிக்குடி, எம்.உசிலம்பட்டி, மயிலாப்பூர், நகரப்பட்டி, ஒளியமங்கலம், ஆர்.பாலகுறிச்சி, வார்பட்டு, வேகுப்பட்டி, வேந்தன்பட்டி, வாழைக்குறிச்சி, முள்ளிப்பட்டி, கீழத்தானியம். கோரிக்கைகள் திருமயம் சட்டமன்ற தொகுதியில் பிரதான தொழில் விவசாயம். இங்குள்ள நிலங்கள் வானம் பார்த்த பூமியாகத்தான் இருந்து வருகிறது. மழை பெய்தால்தான் விவசாயம் நடைபெறும். இதனால் விவசாயம் தொடர்ந்து நடைபெற கொள்ளிடம் காவிரி நீரை புதுக்கோட்டை மாவட்டத்திற்கு கொண்டு வர வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. சுதந்திர போராட்ட தியாகி சத்தியமூர்த்திக்கு திருமயத்தில் மணிமண்டபம் கட்ட வேண்டும். அவர் பிறந்து வாழ்ந்த வீட்டை நினைவிடமாக மாற்ற வேண்டும். திருமயம் பகுதியில் அரசு கல்லூரி அமைக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாகும். திருமயத்தில் இருந்து மதுரை செல்லும் சாலையில் 3 கிலோ மீட்டர் தூரத்தில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் செயல்பட்டு வந்த சித்த மருந்து தயாரிக்கும் தற்போது மூடப்பட்டுள்ளது. அதனை மீண்டும் திறந்து செயல்படுத்த வேண்டும். சிறுவர்களுக்கு பூங்கா அமைக்க வேண்டும். படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பது மக்களின் முக்கிய கோரிக்கைகளாகும். இந்த தொகுதியில் 1957-ம் ஆண்டு முதல் இதுவரை 12 சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெற்று உள்ளன. இந்த தேர்தல்களில் காங்கிரஸ் 6 முறையும், தி.மு.க. 3 முறையும், அ.தி.மு.க. 2 முறையும், த.மா.கா. ஒரு முறையும்வெற்றி பெற்றுள்ளது.
மாவட்டம் :புதுக்கோட்டை மொத்த வாக்காளர்கள்:168422 ஆண் வாக்காளர்கள் :81632 பெண் வாக்காளர்கள் :86790 திருநங்கை வாக்காளர்கள்:0

1 கருத்து:

  1. intha thakaval thavaraanathu kallat inga avvalavaa kidaiyaathu....ungalukku yaaru sonnathu thrumayam thokuthiila namma inam 46% irukkanga... ithu otturimai ullavarkal.intha posta edit pannunga....

    பதிலளிநீக்கு