ஆலங்குடி 2-வது குருஸ்தலம் என போற்றப்படுகிறது. ஆலங்குடி தொகுதியில் உள்ள குளமங்கலத்தில் உள்ள பெருங்கரையடி மிண்ட அய்யனார் கோவில் முன்பு, ஆசியாவிலேயே மிக உயரமான குதிரை உள்ளது. இதனால் குதிரை கோவில் என்று இக்கோவிலின் பெயர் விளங்குகிறது. இங்கு கடலை சாகுபடி அதிகமாக நடைபெறுகிறது. இதற்கான மில்களும் உள்ளன. இத்தொகுதியில் இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் தி.மு.க. 4 முறையும், அ.தி.மு.க. 4 முறையும் வெற்றி பெற்றுள்ளது. மறைந்த முன்னாள் அமைச்சர் வெங்கடாசலம் இத்தொகுதியில் இருந்து 3 முறை சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தொகுதியில் முத்தரையர் இன மக்கள் அதிகமாக வாழ்கிறார்கள். அடுத்ததாக முக்குலத்தோர் வசித்து வருகின்றனர். கணிசமாக எண்ணிக்கையில் மற்ற இன மக்களும் வசித்து வருகிறார்கள். இத்தொகுதியில் திருவரங்குளம் ஒன்றியத்தில் 48 ஊராட்சிகளும், 2 பேரூராட்சிகளும், அறந்தாங்கி தாலுகாவில் உள்ள அரசர்குளம் வருவாய்சரகம், பூவற்றக்குடி வருவாய்ச்சரகம், சிலட்டூர் வருவாய்ச்சரகங்களில் இருந்து 32 ஊராட்சிகளும் இணைந்துள்ளன. இதில் அரசர்குளம் வருவாய்ச்சரகமும், பூவற்றக்குடி வருவாய்ச்சரகமும் தொகுதி மறுசீரமைப்பிற்கு பிறகு புதிதாக இணைக்கப்பட்டதாகும். இதில் ஆலங்குடி பேரூராட்சியும், கீரமங்கலம் பேரூராட்சியும் உள்ளன. இத்தொகுதியில் பெரும்பான்மையானது கிராமப்பகுதிகளே ஆகும். இப்பூக்களை மாலை மற்றும் சரங்களாக தொடுத்து விற்பதில், பூ உற்பத்தியாளர்களுக்கு நல்ல விலை கிடைப்பதில்லை. எனவே இந்த தொகுதியில் உள்ள கீரமங்கலத்தில் ஒரு வாசனை திரவிய தொழிற்சாலை (செண்ட் பேக்டரி) அமைக்க வேண்டும் என்பது பூ உற்பத்தியாளர்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. இதே போல் ஆலங்குடி தொகுதியில் தென்னை மரங்கள் ஏராளமாக உள்ளன. எனவே கீரமங்கலத்தில் தென்னை கொப்பரை கொள்முதல் நிலையம் தொடங்க வேண்டும்.கீரமங்கலம், செரியலூர், கொத்தமங்கலம், குளமங்கலம், அனவயல் ஆகிய பகுதிகளில் சீசன் நேரங்களில் முருங்கைக்காய் விளைச்சல் அதிகமாக உள்ளது. அப்போது 100 காய் கொண்ட ஒரு கட்டு ரூ.10 முதல் ரூ.20 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படுகிறது. எனவே ஆலங்குடி அல்லது கீரமங்கலம் பகுதியில் முருங்கைக்காய் பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை நிறுவ வேண்டும் என்பதும் நீண்ட நாள் கோரிக்கைகளில் ஒன்றாக உள்ளது. கோடை காலங்களில் குடிநீர் தட்டுப்பாட்டால், மக்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். எனவே தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் இருந்து ஆலங்குடி தொகுதி வழியாக அறந்தாங்கி, மணமேல்குடிக்கு காவிரி நீர் குழாய் மூலம் கொண்டு செல்லப்படுவதில் இருந்து ஆலங்குடிக்கும், இதர பகுதிகளுக்கும் குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். ஆலங்குடி தொகுதி கல்வி விழிப்புணர்வு பெற்ற பகுதியாகும். இங்கு 100 சதவீதம் எழுத்தறிவு பெற்றவர்கள் உள்ளனர். ஆலங்குடி- புதுக்கோட்டை சாலையில் உள்ள திருவரங்குளம் தோப்புக்கொல்லையில் ஒரு பொறியியல் கல்லூரி அமைக்க வேண்டும் என்பதும் பொதுமக்களின் கோரிக்கை ஆகும். கோரிக்கைகள் ஆலங்குடியில் முன்பு தமிழகத்திலேயே அதிக கடலை மில் மற்றும் எண்ணை மில்கள் நிறைந்ததாக இருந்தது. தற்போது கடலை மில்கள், திருமண மண்டபங்களாக மாறி வருகின்றன. ஆனால் ஆலங்குடி தொகுதி பகுதிகளில் வேர்க்கடலை அதிகமாக விளைகிறது. அவ்வாறு விளையும் வேர்க்கடலை, விற்பனைக்காக சென்னை மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. ஆலங்குடியில் ஒரு வனஸ்பதி ஆலை உருவாக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். இதேபோல் ஆலங்குடி தொகுதியில் ரோஜா, மல்லிகை, சம்பங்கி, கரட்டான், மரிக்கொழுந்து போன்ற பூ வகைகள் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது.
மாவட்டம் :புதுக்கோட்டை மொத்த வாக்காளர்கள்:165163 ஆண் வாக்காளர்கள் :82532 பெண் வாக்காளர்கள் :82631 திருநங்கை வாக்காளர்கள்:0
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக