ஆலங்குடி, மே 27: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள கறம்பக்காடு பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் நினைவு உயர்நிலைப் பள்ளி எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் 100 சதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
இந்தப் பள்ளியில் எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வை 18 பேர் எழுதினர். இதில் அனைவரும் தேர்ச்சி பெற்றனர்.
இவர்களில் செ. தமிழன்பன் 440, எஸ். சுதர்சன் 434, எம். பிரபாகரன் 432 ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களைப் பிடித்தனர். இதில் 400 மதிப்பெண்களுக்கு மேல் 7 பேர் பெற்றனர்.
தேர்ச்சி பெற்ற மாணவர்களை பள்ளியின் அறக்கட்டளைத் தலைவர் டி. இந்திரன், தலைமையாசிரியர் ஆர். ரமணன், ஆசிரியர்கள் பாராட்டினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக