வெள்ளி, 10 ஜூன், 2011

லோக்பால் மசோதா நிறைவேற்ற 25 கோடி பேர் ஆதரவு தேவை

நாட்டில் ஊழலை ஒழிக்கும் லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட வேண்டுமெனில் 25 கோடி பேர் ஆதரவு தெரிவித்தால்தான் நிறைவேற்ற முடியும் என்ற மத்திய அரசு தமது எண்ணத்தை வெளியிட்டுள்ளது. இதற்கு தங்களின் ஆதரவு எண்ணத்தை தெரிவிக்க உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.



ஊழல் எதிர்ப்பு மசோதா நிறைவேற்றுவதற்கென பல்வேறு தரப்பு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அன்னா ஹசாரே, யோகாகுரு பாபா ராம்தேவ் என பலர் களம் இறங்கி அற வழியில் போராட்டம் நடத்தி இந்த போராட்டத்திற்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது.




மத்திய அரசை வழிக்கு கொண்டு வர பலரும் கடும் முயற்சி மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் இந்த மசோதா நிறைவேற்ற குறைந்த அளவு 25 கோடி பேராவது ஆதரிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறது. நீங்கள் செய்ய வேண்டியது ஒரு மொபைல் எண்ணுக்கு ரிங் செய்ய வேண்டியதுதான் , ஒரு ரிங்கில் கட் ஆகி விடும். இதுவே உங்கள் கருத்தாக எடுத்துக்கொள்ளும். உங்கள் உணர்வு பதிவு செய்யப்பட்டதற்கான நன்றி அறிவிப்பு எஸ்.எம்.எஸ்.சாக வரும். இந்த ஊழல் எதிர்ப்பு போரில் நீங்களும் ஒருவராக இணைத்துக்கொள்ளலாமே.,



அழைப்பு விடுக்கப்பட வேண்டிய எண்கள் : + 91 22 6155 0789 மற்றும் 0 22 6155 0789.


இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்க தோழர்கள் இந்த செய்தியினை குறுந்தகவல் மூலம் மற்றைய நண்பர்களுக்கு பகிர்ந்துக்கொள்ளவேண்டுகிறோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக