வியாழன், 2 ஜூன், 2011

முத்தரையர் சங்கக் கூட்டம் - நன்றி தினமணி

திருச்சி, ஜூன் 1: ஜாதிவாரி கணக்கெடுப்பில் முத்தரையர் எனப் பதிவு செய்ய வலியுறுத்தி, தமிழ்நாடு முத்தரையர் சங்க மாவட்டச் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருச்சியில் தமிழ்நாடு முத்தரையர் சங்கத்தின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலர் மரு. பாஸ்கரன் தலைமை வகித்தார்.

கூட்டத்தில், ஸ்ரீரங்கம் தொகுதியில் வெற்றி பெற்று, 3-வது முறையாக தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்தும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக முசிறி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் என்.ஆர். சிவபதியை நியமித்ததற்கு நன்றி தெரிவித்தும், விபத்தில் இறந்த தமிழக சுற்றுச்சூழல் அமைச்சர் என். மரியம்பிச்சை மறைவுக்கு இரங்கல் தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் வழக்குரைஞர்கள் சிவராஜ், லோகநாதன், செல்ல மகேந்திரன், ஒன்றியச் செயலர்கள் விசுவநாதன், புஷ்பராஜ், ஜயசந்திரன், மருளாளி, அசோக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் குஞ்சான் வரவேற்றார். மாவட்டச் செயலர் தங்கவேல் நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக