வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011

முத்தரையர் சங்க மாவட்ட செயற்குழு

திருச்சி: தமிழ்நாடு முத்தரையர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் மாவ ட்ட தலைவர் மற்றும் பொது செயலாளர் பாஸ்கரன் தலைமையில் நடந்தது.
முத்தரையர் இனமக்கள் பிசி மற்றும் ஒபிசி பட்டியல்களில் இருந்தாலும் கல்வி, வேலைவாய்ப்புகளில் மிக குறைந்த அளவே முன்னேறியுள்ளனர். எனவே மக்கள் விகிதாசாரப்படி முன்னேற்றம் இல்லை. இதனால் இரண்டாம் கட்ட போராட்டமாக கல்வி, வேலைவாய் ப்புகளில் முத்தரையர் இனத்தவர்களுக்கு 15 சதவீ தம் தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஸ்ரீரங்கம் பகுதியில் தொடர் முழக்க போராட்டம் நடத்துவது. தமிழக அரசு அரசாணை வெளியிட்டும் முத்தரையர் இனமக்களுக்கு அம்பலக்காரன் என்கிற சாதி சான்றிதழ் தர தாசில்தார் அலுவலகங்கள் மறுக்கின்றன. இதுகுறித்து கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த சட்டமன்ற தேர்தலில் தேமுதிக நிறுத்திய 42 வேட்பாளர்களில் ஒருவர் கூட முத்தரையர் இனத்தை சேர்ந் தவர் இல்லை. வரும் உள்ளாட்சி தேர்தலில் முத்தரைய இனத்தவர்களுக்கு வாய்ப்பு வழங்க அக்கட்சி தலைவர் விஜயகாந்த் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொருளா ளர் ரங்கராஜ், இளைஞரணி நிர்வாகிகள் பெரியகோபால், தங்கவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக