காரியாபட்டி, ஜூலை 4: விருதுநகர் மாவட்ட முத்தரையர் கல்வி மற்றும் பொதுநல டிரஸ்ட் சார்பில், மாணவ, மாணவிகளுக்கு 2-ம் ஆண்டு கல்வி பரிசளிப்பு விழா நடைபெற்றது. பிளஸ்-2 மற்றும் 10-ம் வகுப்பு அரசு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற முதல் 3 மாணவ,ஹ மாணவிகள் வீதம் 6 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தமிழ்நாடு முத்தரையர் சங்கத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான குழ. செல்லையா, மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கிப் பாராட்டினார்.
பத்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி ராஜேஸ்வரிக்கு பரிசுத் தொகை ரூ. 4 ஆயிரம் வழங்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக