திருச்சி: திருச்சி மேற்குத்தொகுதி இடைத்தேர்தல் அ.தி.மு.க., வேட்பாளர் பரஞ்ஜோதி, வேட்பு மனுத்தாக்கலுக்கு முன் எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்தார்.
திருச்சி மேற்குத்தொகுதி இடைத்தேர்தல் அ.தி.மு.க., வேட்பாளராக, ஸ்ரீரங்கம் தொகுதி பொறுப்பாளராக உள்ள பரஞ்ஜோதி அறிவிக்கப்பட்டார். வேட்பு மனுத்தாக்கல் கடந்த 19ம் தேதியே துவங்கிவிட்டாலும், அன்று அஷ்டமி, மறுநாள் நவமி என்பதால் பரஞ்ஜோதி வேட்பு மனுத்தாக்கல் செய்யவில்லை.நேற்று மதியம் 12 மணி வரை நவமி இருந்தது. அதற்கு முன், சென்ட்ரல் பஸ்ஸ்டாண்ட் ஈ.வெ.ரா., சிலை, சிந்தாமணி அண்ணாதுரை சிலை, ஒத்தக்கடை பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு, வேட்பாளர் பரஞ்ஜோதி மாலை அணிவித்தார். பின்னர், திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கால்நடை மற்றும் பால்வளத்துறை அமைச்சர் சிவபதி, மாநகர் மாவட்டச் செயலாளரும், எம்.எல்.ஏ.,யுமான மனோகரன், எம்.பி.,குமார், எம்.எல்.ஏ., இந்திராகாந்தி, அணிச் செயலாளர்கள் சீனிவாசன், தமிழரசி, பத்மநாபன் உட்பட ஏராளமான கட்சியினர் பங்கேற்றனர்.அதன்பின், தேர்தல் நடத்தும் அலுவலரான, ஆர்.டி.ஓ., சம்பத்திடம், வேட்பாளர் பரஞ்ஜோதி வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக