ஆலங்குடி: ஆலங் குடி அடுத்த வடகாட்டில் முன்னாள் அமைச்சர் வெங்கடாசலத்தின் குரு பூஜையில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
ஆலங்குடி அடுத்த வடகாட்டை சேர்ந்தவர் முன்னாள் அமைச்சர் வெங்கடாசலம். அவர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி அவரது வீட்டில் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட் டார். இந்நிலையில் அவரது நினைவு நாளான நேற்று, அவரது உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அவருக்காக குரு பூஜை நடத்தினர். கடந்த 48 நாட்களாக நூற்றுக்கணக்கானோர் காவி வேட்டி காவித்துண்டு அணிந்து விரதமிருந்தனர்.
நேற்று காலை வடகாடு பெரிய கடைவீதியில் இருந்து வெங்கடாசலத்தின் ஆதரவாளர்களும், பொதுமக்களும் ஊர்வலமாக மாலைகளை ஏந்தி வந்தனர். இதில் புதுக்கோட்டை வர்த்தகர்கள் சங்கத் தலைவர் சீனுசின்னப்பா, புதுக் கோட்டை எம்எல்ஏ முத்துக்குமரன், அணவயல் ஊராட்சி தலைவர் அடைக்கலம், மேலாத்தூர் ஊராட்சி தலைவர் சரவ ணன், தென்னங்குடி ராசா, கீழாத்தூர் முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் செல்வம் உட்பட திமுக, அதிமுக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் உட்பட அனைத்துக் கட்சியியை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். குருபூஜை யில் கலந்து கொண்டவர்களுக்கு மதியம் அன்னதானமும் நடந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக