ஆலங்குடி, அக். 7: ஆலங்குடி அருகேயுள்ள வடகாட்டில் மறைந்த முன்னாள் அமைச்சர் அ. வெங்கடாசலத்தின் முதலாமாண்டு நினைவு நாளையொட்டி, வெள்ளிக்கிழமை நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியின் தொடக்கமாக வடகாடு வடக்குக் கடை வீதியில் தொடங்கி, நினைவிடம் வரை அமைதி ஊர்வலம் நடைபெற்றது. பின்னர், அங்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதைத்தொடர்ந்து, அன்னதானமும், எளிய குடும்பத்தைச் சேர்ந்தோருக்கும், பள்ளி மாணவ- மாணவிகளுக்கும் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக