காஞ்சிபுரம், அக். 12: திருச்சி மேற்கு இடைத்தேர்தலிலும், உள்ளாட்சித் தேர்தலிலும் தமிழ்நாடு முத்தரையர் சங்கம் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
இந்த அமைப்பின் கூட்டம், மாநில அமைப்புச் செயலர் காஞ்சி காடகர் தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் முத்தரையர் இனத்தைச் சேர்ந்த என்.ஆர்.சிவபதி, கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டதற்கும், அதேபோல் திருச்சி மேற்கு தொகுதியில் மு.பரஞ்சோதி, அதிமுக சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து முத்தரையர் சங்கம் கடந்த தேர்தல்களைப் போல் இம் முறையும் அதிமுவுக்கு ஆதரவு அளிப்பது என்று முடிவு செய்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக