சனி, 5 நவம்பர், 2011
ஆனையூர் மக்கள் முயற்சி முறியடிப்பு
சிவகாசி : ஆனையூர் மக்கள் மீண்டும் போராடும் முயற்சி முறியடிக்கப்பட்டது. சிவகாசி அருகே ஆனையூர் ஊராட்சி தேர்தலை மீண்டும் நடத்த கோரி அய்யம்பட்டி, ஒரு பிரிவினர் தொடர்ந்து போராடி வருகின்றனர். ரோடு மறியல், 2 நாட்களாக கலெக்டர் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடத்தினர். இவர்களை மாவட்ட நிர்வாகம் சமாதானப்படுத்தியும் பிரச்னை முடிவுக்கு வரவில்லை. நேற்று 4 கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலைக்கு செல்லாமல் இருந்தனர். இவர்கள் மீண்டும் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட தயாராகினர். இத் தகவல் அறிந்து கூடுதல் எஸ்.பி., சாமிநாதன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீஸ் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. போலீஸ் கட்டுப்பாட்டையும் மீறி சென்றால் நடவடிக்கை எடுக்க போலீஸ் தயார் நிலையில் இருந்தது. இதை அறிந்த மக்கள் கலெக்டர் அலுவலம் செல்லும் திட்டத்தை கைவிட்டனர். தமிழ்நாடு முத்தரையர் சங்க மாநில துணை தலைவர் ராமச்சந்திரன், பாலவநத்தம் ஊராட்சி தலைவர் கன்னியப்பன், ஓய்வு பெற்ற துணை கலெக்டர் முத்துராஜ் பொதுமக்களிடம் பேச்சு வார்தை நடத்தினர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக