சண்டிகர்: அரியானாவில் ஜாட் சமூகத்தினர் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர அவரச சட்டம் ஒன்றினை பிறப்பிக்க முதல்வர் முடிவு செய்துள்ளார். அரியானாவில் ஜாட் சமூகத்தினர் ,இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் , கல்வி,வேலைவாய்ப்புகளி்ல் இட ஒதுக்கீடு கோரி கடந்த மூன்று வாரங்களாக போராடி வருகின்றனர்.ரயில்மறியல் உள்ளிட்ட பல கட்ட போராட்டங்களை நடத்திவருகின்றனர். அரசும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.இந்நிலையில் ஜாட் சமூக பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்திய அரியானா மாநில முதல்வர் பூபிந்தர்சிங் ஹூடா, ஜாட் சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு குறித்து அவரச சட்டம் ஒன்றை கொண்டுவர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
THANKS: DINAMALAR
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக