வியாழன், 26 ஜூலை, 2012

திருச்சியில் முத்தரையர் சங்க தலைவர் உள்பட 5 பேர் கைது

திருச்சி, ஜூலை 26: திருச்சியில் தமிழ்நாடு முத்தரையர் சங்கத்தின் தலைவர் ஆர். விஸ்வநாதன் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். திருச்சி எடமலைப்பட்டி புதூரைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர் எடமலைப்பட்டி புதூர் போலீஸில் அளித்த புகாரில், ஆர்.விஸ்வநாதன், அவரது மகன்கள் ராம்பிரபு, பாலமுருகன், மருமகன்கள் ரவிசங்கர், தர்மராஜ் ஆகிய ஐவரும் சேர்ந்து, அவரைக் கடத்தி மிரட்டியதாகவும், வீடு புகுந்து சூறையாடியதாகவும் கூறியிருந்தார். செல்வகுமார், திருச்சியில் வீரமுத்தரையர் பேரவையின் நிர்வாகி. இதை அடுத்து, ஐந்து பேரையும் கைது செய்த காவல்துறை, திருச்சி நீதித்துறை நடுவர் மன்றம் ஜேஎம்2 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை ஆகஸ்ட் 9ம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி ராஜேந்திரன் அனுமதி அளித்தார். இதை அடுத்து அவர்கள் 5 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதனால் திருச்சி புறநகரில் சற்று பதற்றம் நிலவியது. NEWS FROM : DINAMANI

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக