வியாழன், 26 ஜூலை, 2012

முத்திரையர் சங்கத்தலைவர், மக‌‌ன் கைது

வ‌ன்முறை‌யி‌ல் ஈடுப‌ட்டதாக கூ‌றி முத்திரையர் சங்கத்தலைவர் விஸ்வநாதன், அவரது மகன் பரதன் ஆ‌கியோரை திருச்சியில் போ‌‌லீசா‌ர் இ‌ன்று கைது செ‌ய்து‌ள்ளன‌ர். ‌திரு‌ச்‌சி‌யி‌ல் அ‌ண்மை‌யி‌ல் நட‌ந்த முத்திரையர் விழாவின்போது வன்முறை ஏ‌ற்ப‌ட்டது. இதனா‌ல் அரசு பேரு‌ந்துக‌ள், கடைக‌ள் அடை‌த்து உடை‌க்க‌ப்ப‌ட்டன. இது தொட‌ர்பாக காவ‌ல்துறை‌யின‌ர் வழ‌க்கு‌ப் ப‌திவு செ‌ய்து மு‌த்‌திரைய‌ர் ச‌ங்க‌‌த் தலைவ‌ர் ‌வி‌ஸ்வநாத‌ன், அவரது மக‌ன் பரத‌ன் ஆ‌கியோரை தேடி வ‌ந்தன‌ர். தலைமறைவாக இரு‌ந்த அவ‌ர்களை இ‌ன்று ‌திரு‌ச்‌சி‌யி‌ல் காவ‌ல்துறை‌யின‌ர் கைது செ‌ய்து‌ள்ளன‌ர். இதனா‌ல் திருச்சி மாநகர் முழுவதும் பாதுகாப்புக்காக போலீசார் குவி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர். news from: webdunia tamil

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக