சனி, 28 ஜூலை, 2012

வேதையில் அரசு பஸ் கண்ணாடி உடைப்பு

வேதாரண்யம்: திருச்சியில், முத்தரையர் சங்க மாநிலத்தலைவர் விஸ்வநாதன் திடீரென கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, வேதையில் அரசு பஸ்ஸின் கண்ணாடியை முத்தரையர் சங்க அமைப்பினர் கல்வீசி உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.திருச்சியில், முத்தரையர் சங்க மாநில தலைவர் விஸ்வநாதன் நேற்று முன்தினம் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இதைக் கண்டித்து வேதாரண்யம் அடுத்த செண்பகராயன்நல்லூர் பகுதியில் சென்று கொண்டிருந்த அரசு பஸ் மீது கல்வீசி, நேற்று அதிகாலையில் அப்பகுதியை சேர்ந்த முத்தரையர் சங்கத்தினர் திடீரென தாக்கியதில் கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. இதுகுறித்து, புரட்சி சிங்கங்களின் அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் சிரஞ்சீவி உள்ளிட்ட அடையாளம் தெரியாத ஐந்து பேர் மீது பொதுச்சொத்தை சேதப்படுத்தியதாக கரியாப்பட்டணம் போலீஸார், வழக்குப்பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. NEWS FROM : DINAMALAR

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக